நிதியுன்னன்பில்

  • நீதியுன் கருணையில் பொதிந்து கிடக்கும்
  • நிதியுன் னன்பில் நவமாய்ப் பதிந்து சிறக்கும்
  • கதியுன் திருவடித் தாமரையில் வியந்து
  • வியாபகமாய்ச் சிறகடித்துப் பறக்கும்
  • சதியிருப்பினுன் சங்கல்ப்பத்தினால்
  • தானாய்த் தனியே போகும்
  • மதிமுழுதுமுன் மதிவதன மந்தஹாசமுகப் புன்னகையில்
  • ஆனந்தமாய்த்தான் மயங்கும்
  • விதி என்செய்யும், கோள்தானென்செய்யுமுன்அபயஹஸ்தம்
  • ஆசி வழங்கு மழகினிலே மகிழும்
  • நதிகளாயுன் பக்தநதிகள் சங்கமித்து னதன்புக்
  • கருணைக்கடலில் கலந்து சங்கமிக்கும்
  • கதிநீயாயுன் சனாதனதர்மத்தில் சந்ததியாய்ச் சரணடையும்
  • பதி நீயே பர்த்திவாச பரசிவமே பாருக்குள்
  • நல்நாடாம் நம் பாரத நாட்டிலவதரித்த
  • பிரசாந்திக் கருவறைத் தெய்வமே உன்பத மலரில்
  • பரவசம்தான் கிட்டும்
  • தரிசனம், ஸ்பரிசனம், சம்பாஷனத்தில், ஆனந்த
  • ஆர்ப்பரிப்பாய்க் கொட்டும் அருவியாய் ஓடும், நதியாய்,
  • விரிந்து பரந்த ஆழியாய், வியாபித்த அண்டமாய்,
  • ஆத்மாவில் மண்ணுக்கும் விண்ணுக்குமான
  • எல்லையிலா ஆனந்தம் எட்டும், நிரப்பும், நிறையும்
  • சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சையில் இத்தரணியெங்கு
  • முன்அன்பு மதம் இனம் மொழியால்
  • மனிதம் மாண்புறும் அருள்தர வருகவே சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0