பக்திப்பயிர்கள்

  • சனாதன சாரதியே ஞாலத்தின் உதயசாயி.
  • ஞாயிறு தெய்வமே !.
  • வையத்தில் ஒளிதந்து ஒளிர்ந்து மதியாய்க் குளிர்ந்து,.
  • சகலர்க்கும் நன்மை மட்டுமே நல்குகிறாய்
  • வேறுபாடு பாகுபாடென்பதேது உன்னில் சுவாமி ? .
  • உயிர்களும் பயிர்களும் பஞ்சபூதத்திலடங்குமப்.
  • பஞ்சபூதங்களுமுன்னில்தா னடக்கமல்லவா சுவாமி !.
  • குறைவிலாக் கடமையாற்றிடு மிவைகளுனதன்புக்.
  • கருணயிலே மிளிர்கின்றன சுவாமி.
  • உதய ஞாயிறு நீதானெங்களின் இதய ஞாயிறு சுவாமி
  • சாயி உன் தபோவனதாணிவேர் பக்தியில்.
  • பதியமான பக்திப்பயிர் பக்தர்களாய் .
  • சத்ய, தர்ம, சாந்தி பிரேமை அகிம்சையில்.
  • கிளை, கனி, மொட்டு, மலர், காய், கனியாய் .
  • ஆத்மநிவேதனமாய் ஆனந்தமடைந்தே.
  • பிறவிப்பயனெய்திட வுன்ருட்கருணை வேண்டுமதை.
  • நீ தந்தருள வேண்டும் சுவாமி
    • முந்தை எந்தை தந்தையாய் முப்போது மெப்போதும்.
    • துணை வரவேண்டும். சரணம் போற்றியே.
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0