சாயி பிரபாவம்

  • புத்தம் புது மலர் பறித்து அதில் நித்தம்
  • நித்தமுனை நினைத்தே துதித்துச் சத்ய தர்மம் சாந்தி
  • பிரேமை அகிம்சையில் நிலைத் துன்நாமஸ்மரணையின்
  • பெயர்களை, செபித்துன், புனித நாமாவளிகளில்
  • மனம் லயித் துன்னெழிலுருவ வழிபாடுகளில் திளைத்து
  • இதயமாம் கோவிலிலுனைத் தொழுதுனது ஒரே மதம் மொழி
  • இனமாம் சனாதன தர்மத்தில் மனமொன்றி உன்
  • அமுதமொழிகளில் மனமகிழ்ந்து
  • ஆயிரம் தாயன்புக் கருணையில் நனைந்திப் பிறவி
  • முழுவதும் உன்னைத் தொடர்ந்து வர நீயும் தொடர்ந்தே
  • உடன் வர, உன் சாந்நித்திய சங்கல்பமருள வேண்டும்
  • கோடி சூரியப் பிரகாசமே சாயி உன் கருணை
  • கோடியக்ஞப்பிரபாவம் சாயி நீ அருணை
  • கோடி தவப்பிரயாகமே சாயி நீ பொருணை
  • கோடி மகிமைப்பிரதாபனுன் அன்பே திரிவேணி
  • சங்கமப் பிரயாகை
  • உன் மலரடி பணிகின்றோம் உனக்கு ஆத்மார்த்த வந்தனம்
  • சுவாமி சரணம் போற்றி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0