பரப்பிரம்மமாய்

  • சாயி சிவமே ஒரே பரப்பிரம்மம் நீயானாய்
  • இருவினைகளிலும், அல்லவை அகற்றி நல்லவை ஈந்து
  • மும்மலங்கள் களைந்து, நான்மறை வேதங்கள் கற்றே
  • நானிலம் போற்றச் செய்வாய்
  • உன் ஐந்து எழுத்து ஓதுவோர்க்கரிதான
  • வாழ்வளித்தும் வாழ்வியலில் வளம் தருவாய்
  • ஆறுமுகன் கணபதி தந்தையே, உமைப் பாதி பாகனே
  • ஏழ்பிறப்பு இருப்பின் நீ எந்தை தந்தையாயுன் கருணை
  • தரவேண்டும்
  • அட்ட செல்வங்கள் அளித்து எண்திக்கிலும் ஏற்றம்
  • நீ அளிக்க வேண்டும்
  • எட்டுச் செல்வங்களும் தந்து அற்புதம் அளிக்க வேண்டும்
  • நவநதிகளாய் ஆர்ப்பரித்து நவநிதிகள் பதித்த நல்லருள்
  • மாலைகளில் நர்த்தனமாய்நன்மைகள்செய்திட வேண்டும்
  • பத்து அவதாரங்களிலும் பகிர்ந்து தயை செய்ய வேண்டும்
  • அரனும் நீ, தசாவதாரனும் நீ, அரிஅரனாய், அகிலம்
  • அனைத்திலும் எல்லா உயிர்களுக்கும் அன்னை தந்தையாகிச்
  • சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சை, அளித்துன்
  • கீதைப் பாதையில் வழிநடத்தி
  • வாழ்விப்பாயே பரப்பிரும்மப் பராபரமே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0