சத்திய தரிசனம் கண்டேன்

Sairam! This is available only in Tamil*

  • தூல வடிவம்
  • தரிசனம் பெற்றேன்
  • அரி அரனைக் கண்டேன்
  • புரியாதவயதில் ஆயினும்
  • உரியவன் நீயேயெனக்கு என்று
  • உறுதி கொண்டேன்
  • நின்னை கண்டதும்
  • என் உளம் களிப்புற்றது
  • கருணையின் வடிவே
  • அருள்தர எண்ணி
  • அழைத்தே அருளினாய்
  • அங்கையின் விபூதி
  • நின் திருக்கரம்
  • என் சிரம் தொட்டு
  • ஆசிதனை வழங்கியது
  • கசிந்தது கண்களிலே நீராய்
  • நசிந்திட்டது வினையாவும்
  • நான் பெற்ற நற்பயனால்
  • வாழ்வினில் விளக்கேற்றி
  • தாழ்வுற்ற என்னை
  • தரத்தில் உயர்த்தி
  • முரண்தனைக் களைந்தாய்
  • களப்பணி ஆற்றி
  • வளமோடு வாழ்ந்திட
  • அளவிலாது அழைத்தே
  • உளம்நெகிழ உரையாடினாய்
  • உளம் மகிழ
  • உழைத்திட்டேன் களைப்பிலாது
  • கழலடி ஈந்தாய்
  • தொழுதே வணங்கினேன் பலமுறை
  • முன்போல் இல்லாது
  • கண்களில் கண்டிடும்
  • உன் தூல உடலை
  • கண்டிடயியலாது மறைத்தே நிற்கிறாய்
  • ஆனாலும்
  • முன்னைவிட எங்கும்
  • உன்னையே காண்கிறேன்
  • மாறாது மறவாது
  • சிவந்த வண்ணத்தினை
  • காண்கின்ற போதெல்லாம்
  • காண்கிறேன் உன்னையே
  • உன் சித்திரத்தை
  • நான் சித்தரமாய்க் காணாது
  • சத்தியமாய் உனையே காண்கிறேன்
  • உனை அதில்
  • காணும்போதெல்லாம்
  • எனையும் நீ காண்பதாக
  • உணர்கிறேன்
  • நித்தமும் உன் திருவடிதனை
  • நூறுமுறை பணிகின்றேன்
  • தடையேதுமிலாது நீயும்
  • தருகிறாய் களிப்புடனே
  • முன்னரைவிட முழுதுமாய்
  • உன்னிடம் உரையாட
  • அனுமதியும் அளிக்கிறாய்
  • அமைதியாய் அமர்ந்தே
  • மாபெரும் முரட்சியாய்
  • மாமன்னன் சாயிநாதன்
  • மனமாற்றத்தைத் தந்தே
  • யாவருக்கும் எப்போதும்
  • முகிழ்ந்தே அமிழ்திடவைத்து
  • மகிழ்வுதனைத் தருகின்றேன்
  • சாயி நீ வாழ்ந்த காலத்தில்
  • எங்களையும் வாழவைத்து
  • பொங்கிடும் களிப்பினை
  • மங்காது தந்திடும்
  • சுந்தரமாம் உன் பாத
  • சுவட்டினை பற்றியே நடந்திடுவோம்
  • கடந்திடுவோம் பிறவிப்பிணிதனை நலமுடனே
  • அடைந்திடுவோம் உன்
  • அன்பு மலரடிதனை சாயி
  • கவிஞர்
  • ஹரிஹரன்
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0