சத்திய தரிசனம் கண்டேன்
- தூல வடிவம்
- தரிசனம் பெற்றேன்
- அரி அரனைக் கண்டேன்
- புரியாதவயதில் ஆயினும்
- உரியவன் நீயேயெனக்கு என்று
- உறுதி கொண்டேன்
- நின்னை கண்டதும்
- என் உளம் களிப்புற்றது
- கருணையின் வடிவே
- அருள்தர எண்ணி
- அழைத்தே அருளினாய்
- அங்கையின் விபூதி
- நின் திருக்கரம்
- என் சிரம் தொட்டு
- ஆசிதனை வழங்கியது
- கசிந்தது கண்களிலே நீராய்
- நசிந்திட்டது வினையாவும்
- நான் பெற்ற நற்பயனால்
- வாழ்வினில் விளக்கேற்றி
- தாழ்வுற்ற என்னை
- தரத்தில் உயர்த்தி
- முரண்தனைக் களைந்தாய்
- களப்பணி ஆற்றி
- வளமோடு வாழ்ந்திட
- அளவிலாது அழைத்தே
- உளம்நெகிழ உரையாடினாய்
- உளம் மகிழ
- உழைத்திட்டேன் களைப்பிலாது
- கழலடி ஈந்தாய்
- தொழுதே வணங்கினேன் பலமுறை
- முன்போல் இல்லாது
- கண்களில் கண்டிடும்
- உன் தூல உடலை
- கண்டிடயியலாது மறைத்தே நிற்கிறாய்
- ஆனாலும்
- முன்னைவிட எங்கும்
- உன்னையே காண்கிறேன்
- மாறாது மறவாது
- சிவந்த வண்ணத்தினை
- காண்கின்ற போதெல்லாம்
- காண்கிறேன் உன்னையே
- உன் சித்திரத்தை
- நான் சித்தரமாய்க் காணாது
- சத்தியமாய் உனையே காண்கிறேன்
- உனை அதில்
- காணும்போதெல்லாம்
- எனையும் நீ காண்பதாக
- உணர்கிறேன்
- நித்தமும் உன் திருவடிதனை
- நூறுமுறை பணிகின்றேன்
- தடையேதுமிலாது நீயும்
- தருகிறாய் களிப்புடனே
- முன்னரைவிட முழுதுமாய்
- உன்னிடம் உரையாட
- அனுமதியும் அளிக்கிறாய்
- அமைதியாய் அமர்ந்தே
- மாபெரும் முரட்சியாய்
- மாமன்னன் சாயிநாதன்
- மனமாற்றத்தைத் தந்தே
- யாவருக்கும் எப்போதும்
- முகிழ்ந்தே அமிழ்திடவைத்து
- மகிழ்வுதனைத் தருகின்றேன்
- சாயி நீ வாழ்ந்த காலத்தில்
- எங்களையும் வாழவைத்து
- பொங்கிடும் களிப்பினை
- மங்காது தந்திடும்
- சுந்தரமாம் உன் பாத
- சுவட்டினை பற்றியே நடந்திடுவோம்
- கடந்திடுவோம் பிறவிப்பிணிதனை நலமுடனே
- அடைந்திடுவோம் உன்
- அன்பு மலரடிதனை சாயி
- கவிஞர்
- ஹரிஹரன்