பிரபஞ்ச விவசாயம்

  • கடவுளைக் காண ஏன்
  • கண் திறக்க வேண்டும்?
  • வீட்டுக்குள்ளே கடவுள்
  • வந்துவிட்ட பிறகு
  • வாசலில் அமர்ந்து எதை
  • வேடிக்கைப் பார்க்க வேண்டும்?
  • பூரணத்தை உண்ட பிறகு
  • பாயாசத்திற்காக ஏன்
  • புலம்ப வேண்டும்?
  • ஒரே கடவுள்
  • சத்ய சாயி இருக்கையில்
  • எத்தனைப் பிரகாரங்களை
  • எதற்குச் சுற்றி வரவேண்டும்?
  • இறைவனின் பாதங்களில்
  • இதயத்தை வைத்த பிறகு
  • மனிதர்களிடம் எதைப் போய்
  • எதிர்பார்க்க வேண்டும்?
  • உள்ளத்தில் அட்சயப் பாத்திரமே
  • உட்கார்ந்திருக்கையில்
  • உலகத்திடம் எதற்கு
  • யாசிக்க வேண்டும்?
  • ஆகாயமே நம் அகத்தில்
  • ஆழ்ந்திருக்க..
  • அதில் ஆழாமல்
  • அகிலத்தோடு அமிழ்ந்தேன்
  • வாழ்ந்திருக்க வேண்டும்?
  • உஞ்சவிருத்தியோ…
  • உற்சவமோ…
  • எதை இறைவன் தந்தாலும்
  • ஏற்க மனம் ஏன் மறுக்கிறது?
  • கையில் கற்பக மரமிருக்க
  • மந்தியாய் மனம் ஏன்
  • முருங்கைக் கிளைக்குப் பறக்கிறது?
  • சத்ய சாயி எனும்
  • பெயர் இருக்கையில் ஏன்
  • மற்றப் பெயர்களை மனம்
  • ஜபமாய் உரைக்கிறது?
  • பூஜைப் பொருளாய்
  • நாமே இருக்கையில்
  • பூஜைப் பொருட்களாய்
  • எதனைத் தேடுவது?
  • உடம்பினுள் பூத்து
  • இதயமே காத்திருக்கையில்
  • கிளையில் பூத்த
  • இதழ்களை வைத்து
  • என்ன செய்வது?
  • உத்தரணி நீரா?
  • கண்களில் இல்லாததா..?
  • கற்சிலையாய் நாமே
  • உறைவதற்குத் தானே
  • கற்சிலையாய்க் கோவிலில்
  • கடவுளை வைத்தனர்
  • உறைந்தாள் கடவுள்
  • உனக்குள்ளே என்பதைத் தானே
  • கர்ப்பக கிரகத்தில்
  • காட்சி வைத்தனர்
  • கடவுள் சத்ய சாயி ஒருவரே என
  • கனிந்து விட்ட இதயத்தில்
  • கண்ணீரே அபிஷேகமாகிறது
  • கைக் கூப்பும் முறையே
  • கோபுரமாகிறது
  • தியானக் கனலே
  • தெய்வ சாயிக்கு
  • ஆரத்தியாகிறது
  • நொடி எல்லாம்
  • சுவாசக் காற்றில்
  • சாயி பஜனையே நிகழ்கிறது
  • அது நிகழ … நிகழ
  • நொடியே நெகிழ்கிறது
  • அது நெகிழ … நெகிழ
  • இதயம் ஆன்மாவை உழுகிறது
  • அது உழுது … உழுது …
  • அண்டமே ஆன்மாவைத் தொழுகிறது
  • …………………………. கவிஞர் வைரபாரதி
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0