ஆனந்தமயம்
- வேதங்கள் நான்கும் நானிலத்தில் நன்மையே நல்கிடும்
- சாயி உன் கீதங்களென்றுமே இன்பமதைத்
- தந்தினிமை கூட்டிடும்
- பேதங்களேதுமில்லை யுன் அன்பு மதம்
- மொழியாம் கருணையிலே
- மாயங்கள் மனதில் லயித்து நினைவினில்
- மயக்குமுன் னருளினில் சுவாமி
- உனதருளுரை, அறவுரை, முத்து ரத்தினங்களாம் நவநிதிகள்
- பல் நல்லுரைகளும் கீதையின் கீதம், ராகம், ஆனந்தமயம்
- உன் அதிசய அற்புத லீலைக ளவதார மகிமைகள் பக்தர்தம்
- அனுபவ ஆனந்த அனுபவங்கள் சாயி உனது
- அலங்கார ஆபரணங்கள், சரீரங்கள்
- பக்திப்பரப்பிரும்மமுன் சங்கல்பங்கள்
- சாந்நித்தியங்கள், சாகித்யங்கள், சரித்திரங்கள்
- உன் ஸ்பரிசனம் தரிசனம் சம்பாஷனங்க ளெங்களின்
- சந்தோஷத் தருணங்கள் சுவாமி
- உன்கீதம் இனிய சங்கநாதம், வேதமுன்
- திருமலரடிப் பங்கயப்பாதம்
- உன் மதி, முக தரிசனம் மந்தகாசப் புன்னகை
- மதுர, மதுவே முருக, மயூரம்
- மார்கழித் திங்களின் ராதையின் கண்ணனாய்ப்
- பார்த்தனுன் பர்த்தியே மதுரா பிருந்தாவன கோகுலம்
- அயோத்தி ராமனும் கோதையின் ரங்கனுமான சிவசக்தி
- ஸ்வரூபமான சாயி ராமகிருஷ்ண ஸ்ரீ சத்ய சாயி
- தெய்வமே உன் மலரடி சரணம் போற்றி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்