புத்தம் புது உதயம்
- ஒவ்வொரு நாளும் புத்தம்புது விடியல் உதயம்
- சாயிநாதா உன் மகிமைப் பிரதாபங்க ளளிக்கும்
- நித்தம்தான் சுகந்தம்
- வெட்டவெளி, காடு, மலை, முகடு, கடல், காணி, நீர், ஏரி, கிணறு,
- நிலமனைத்துமே இயற்கையாயுந்தன் பிரபாவம்
- பன்மதப்பக்தரிலும் உன் அன்பும் கருணையும்
- பாயும் பிரவாகம்
- எண்ணிலடங்கா அற்புதங்கள் ஆயிரமாயிரம் பல நூறாயிரம்
- சொல்லிலடங்கா வுன்புகழ்பாடப் பண்கள்
- பல்லாயிரங் கோடிகள்
- கூடி வரும் யோகம் தன்னாலதுன்னால்
- வரும் பக்தியின் யாகம்
- உன் சத்தியப்பாதையில் வரும் நல்வாழ்வியல் போகம்
- உன்சங்கல்பமில்லாவிடில் வந்த வழி
- தானாய்த் தனித்து அதுபோகும்
- உன் அவதாரம் முழுதும் அகிலத்தில் நற்பவி நல்கிய பவதாரம்
- பரப்பிரும்மம் நீ தானே ஆத்மார்த்தமாய் எங்களின் ஆதாரம்
- உன் பாதார விந்தம் பந்தமதுபாந்தம் எங்களின் சொந்தம்
- நிந்தித் தோர்க்கும் அனுக்கிரக மளித்திடுமே உன்
- விந்தையான விந்தம் தரும் சுகந்தம் சுவாமி
– தமிழரசி பாலசுப்பிரமணியம்