காப்பாற்றும் கூக்குரல் எது?

சிவனைப்பற்றி ஓர் அருமையான கதை இருக்கிறது. இரவின் இருளில் ஒருநாள் சிவனும் பார்வதியும் விண்வழியாகப் பயணம் செய்துகொண்டிருந்தபோது, ஒருவன் மரக்கிளையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தனர்; கீழே தரையில் விழுந்தால் அவனது அங்கங்கள் துண்டாகும் நிலைமை. அவன்மீது அனுதாபப்பட்ட பார்வதி அவனைக் காப்பாற்றும்படி சிவனிடம் வேண்டினார்; அதற்குச் சிவன்:- “ஏன், நீ காப்பாற்றினால் என்ன?” என்று திருப்பிக் கேட்டார். இதற்கிடையில் அவன் விழும் நிலைமை அபாய கட்டத்தை அடைந்தது.

அப்போது அவர்கள், அவன் ‘அம்மா’ என்று கத்தினால் பார்வதி காப்பாற்றவேண்டுமென்றும், ‘அப்பா” என்று கத்தினால் சிவன் காப்பாற்றவேண்டுமென்றும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

ஆனால் அந்த ஆசாமியோ அம்மா என்றும் கத்தாமல் அப்பா என்றும் கத்தாமல் “ஐயோ” என்று கத்திவிட்டான். அதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவன் தனிமையில் விடப்பட்டான்.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0