பித்ரு யக்ஞம்
பெற்றோருக்குப் பணிந்து நடந்து கொள்ளுங்கள்; அப்போதுதான் உங்களுடையப் பிள்ளைகள் உங்களுக்குப் பணிவார்கள். புராணத்தில் இது குறித்து ஓர் அருமையான கதை உள்ளது. தெய்வீகப் பெற்றோர்களான சிவனும், பார்வதியும் தமது பிள்ளைகளுக்கு (கணபதி, முருகன்) ஒரு சோதனை வைத்தனர். உலகம் முழுவதையும் ஒரு சுற்றுச் சுற்றி யார் முதலில் பெற்றோர்களை அடைகிறார்களோ அவருக்குப் பரிசு வழங்கப்படும்.

முருகன் விரைவாகத் தொடங்கி, மலைகளைப், பள்ளத்தாக்குகளைக் கடந்து வேகமாகச் சுற்றிக்கொண்டிருந்தார். ஆனால் விநாயகரோ, பெற்றோர்களை வேகமாக ஒருமுறை சுற்றிவிட்டுப் பரிசளிக்கும்படி வேண்டினார்; அனைத்து உலகங்களும் அன்னைத் தந்தைக்குச் சமமானவை என்றார் அவர்; அந்தக் கருத்து சிறந்த கருத்து என ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அறிவு வளர்ச்சிக்கு உதவுபவர் என்றும், வழியில் உள்ள தடைகளை நீக்கி சாதகர்களைக் காப்பாற்றுபவர் என்றும் போற்றப்படுபவர் கணபதி. பெற்றோர்களைப் போற்ற வேண்டும், பணியவேண்டும் என்பதே இதில் உள்ள நீதி. இதுதான் உண்மையான பித்ருயக்ஞம்.
  
  Help Desk Number: