பிரம்ம ரிஷி
பற்பல ஆண்டுகள் ஆன்ம சாதனை செய்து மேன்மையுற்ற போதும், மிக உன்னதமான பட்டமான பிரம்மரிஷி என்ற பட்டம்கிட்டாமல் வசிஷ்டர் விஸ்வாமித்திரை, ராஜரிஷி என்று அழைத்தது அவரை நிலைகுலைய வைத்துவிட்டது. எனவே ஒரு கூர்மையான வாளால், வசிஷ்டரைத் தீர்த்துக்கட்டி விடுவது என்று தீர்மானித்தார்; வசிஷ்டர் நிலவொளியில் சில சீடர்களுக்கு பாடம் போதித்துக்கொண்டிருந்தபோது, விஸ்வாமித்திரர் மறைந்து சென்று அவருடைய இருக்கைக்குப் பின்னால் அமர்ந்தார்.

தான் இருப்பது தெரியாதபடி புதர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்த அவர், வசிஷ்டர் என்ன போதிக்கிறார் என்பதை சற்று நேரம் கவனித்தார். விஸ்வாமித்திரரின் இதயம் குளுமையானது, பிரகாசமானது, நிவாரணமளிப்பது, ஆனந்தமளிப்பது, பிரபஞ்சம் முழுவதிற்கும் உரியது, அனைவரையும் மகிழ்விப்பது; அந்த இதயம் அனைவரையும் கவரும் நிலவொளியைப் போன்றிருந்தது என்று வசிஷ்டர் விளக்கிக் கொண்டிருந்தார்; அதைக் கேட்டு வியப்புற்றார் அவர்; அவரது பிடியிலிருந்து, வாள் நழுவியது. உடனே அவர் வேகமாக ஒடி தனது பகைவனின் பாதத்தில் வீழ்ந்து, அதைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு வணங்கினார். வசிஷ்டர் விஸ்வாமித்திரரைத் தட்டியெழுப்பி, “ஓ! பிரம்மரிஷியே எழுந்து நிற்பாயாக” என்று பாராட்டித் தனது சொந்த இருக்கையில் அவரை அமரவைத்தார்.

ஆணவம் இருக்கும்வரை பிரம்மரிஷி என அழைக்கக் கூடாதென, வசிஷ்டர் விளக்கினார். அந்த ஆணவம் அடியோடு ஒழிந்து, பகைவனின் பாதத்தில் விழுந்த உடனேயே, அந்த உன்னதமான பட்டத்தின் மீதிருந்த ஆசையும் அற்றுவிட்டது. அப்போது அந்தப் பட்டத்துக்குரிய முழுத்தகுதியும் அவருக்கு வந்துவிட்டது.
Help Desk Number: