எங்கு பயணித்தாலும்
- சுவாமி உன் தரிசனம் ஸ்பரிசனம் சம்பாஷனம்
- ஒவ்வொரு அணுவிலும் எதிரொலிக்கும்
- கனவிலும் நனவிலும் வந்து காட்சி தரும் விந்தையை
- என் சொல்வது?
- மலர்கள் மாலைகளால் ஏற்படும் ஆச்சரியங்கள்
- ஆத்மார்த்த அதிசயங்கள்தானே
- விபூதியின் மகிமையை எடுத்தியம்பச் சொல்லால்
- வார்த்தைகளிலிடமேது ?
- நினைத்தாலே தரிசன முழுப் பலன் கிட்டுவது அத்யந்த
- பக்தர்களின் ஆன்மாவின் அன்பு அனுபவம்தானே
- படத்தின் முன்னர் வேண்டுகையில் ஆயிரம் அர்த்தங்களும்
- சிரிப்பில் வசந்தமும் ஆசீர்வாதத்தின் அன்பும்
- கருணையும் இதயத்திலுன் உன்
- அன்பு பிரேமையை எண்ணி யெண்ணிச் சிலிர்க்க
- சிந்திக்க மகிழ வைக்குமே
- காடு மலை கழனி எங்கு பயணித்தாலும் அங்குன்
- புகைப்படம், புத்தகம், பேச்சு வடிவில்
- கிட்டும் அனுபவங்கள் தான் என்னே !
- மகிழுந்து, பேருந்து, விமானம், கப்பல், படகென,
- எங்கு பயணித்தாலும் ‘சாய்ராம்’
- என்ற தாரகமந்திரம் காட்சிதருமே
- வேண்டுதல் வேண்டுகையில் யார் மூலமாவது
- எப்படியாவது அதற்குரிய பதில் வந்து
- சேர்வதெங்களின் பாக்கியமே சுவாமி
- இப்பிறவி பெற்ற பயன் சுவாமியின் அவதார காலத்தில்
- வாழுகின்ற வாழ்வியல்தான் சுவாமி
- சுவாமியுடன் தொடரும் தொடர்கதையும்தான்
- நினைத்தாலே இனிக்கும் மனதை மயக்கும் ஸ்ரீ சத்திய
- சாயீசா உன் மதுரம் மதுரம் மதுரம்
- சாயி குடும்பம் எனும் பந்தமென்றும் நிரந்தரம்
- புரந்தர விட்டலனுன் வினோத மகிமைகளின் சுதந்திரம்
- நீ நினைத்தால் மட்டுமே கூற இயலும் ‘சாய்ராம்’ மந்திரம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்