சிவசக்தியாய்

  • ஸ்ரீ சத்திய சாயி சிவமே சனாதன தர்ம ஆகர்ஷனமே
  • உந்தன் கீதை வழி தானெங்களினிதய ஆவர்த்தனம்
  • கயிலாயக்கடைக் கோடித் தெய்வமாமுன் கடைக்கண்
  • பார்த்துவிட்டால் விலகிடுமே வினையெல்லாம்
  • பர்த்தி சிவசக்தி ஸ்வரூப, சிவ சீவனே, உன் நயன
  • தீட்சை தருமே நற்பவியே நாளெல்லாம்
  • உன் தரிசனமளித்திடும் ஆத்ம ஆனந்தத் தத்துவம்
  • உன் கரிசனத்தில் கிட்டுமேதான் ஆத்மார்த்த
  • அமரத்துவ மினியவுனது சம்பாஷனமதில்
  • சென்மம் சாபல்யமாகுமே
  • மும்மலங்கள் தானாய்ப் போகுமே உன் முகமன்னருளில்
  • முதிரெதிர்வினைக ளகலுமே
  • கற்பனைக்கெட்டா அறிவிலடங்காத உன்
  • அற்புதங்க ளென்றும் தொடர்கதையே
  • பல்வினையும் பழவினையும் வல்வினையும் வரும்
  • வினையும் விலகித்தான் போகுமே விதி மாறித்
  • தீருமே ஸ்ரீ சத்திய சாயி உன் சங்கல்பத்திலே
  • சங்கடங்கள் தீருமே உன் சாந்நித்யத்தாலுமே
  • சத்தியத் தெய்வமே சர்வேஸ்வரனே பரப்பிரம்ம
  • பரசிவனே பர்த்தித்தலப் பரமேஸ்வரனே
  • உமைபாதி பாகனே திருச்செங்கோட்டு வேலனே
  • திங்கள் முடி சூடிய சிவமே, சீவனே அருட்தவமே திங்களில்
  • திங்களாய்த் திருவாய் அருவுருவா யருள்தர வரவேண்டும் ஈசா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0