சிவசக்தியாய்
- ஸ்ரீ சத்திய சாயி சிவமே சனாதன தர்ம ஆகர்ஷனமே
- உந்தன் கீதை வழி தானெங்களினிதய ஆவர்த்தனம்
- கயிலாயக்கடைக் கோடித் தெய்வமாமுன் கடைக்கண்
- பார்த்துவிட்டால் விலகிடுமே வினையெல்லாம்
- பர்த்தி சிவசக்தி ஸ்வரூப, சிவ சீவனே, உன் நயன
- தீட்சை தருமே நற்பவியே நாளெல்லாம்
- உன் தரிசனமளித்திடும் ஆத்ம ஆனந்தத் தத்துவம்
- உன் கரிசனத்தில் கிட்டுமேதான் ஆத்மார்த்த
- அமரத்துவ மினியவுனது சம்பாஷனமதில்
- சென்மம் சாபல்யமாகுமே
- மும்மலங்கள் தானாய்ப் போகுமே உன் முகமன்னருளில்
- முதிரெதிர்வினைக ளகலுமே
- கற்பனைக்கெட்டா அறிவிலடங்காத உன்
- அற்புதங்க ளென்றும் தொடர்கதையே
- பல்வினையும் பழவினையும் வல்வினையும் வரும்
- வினையும் விலகித்தான் போகுமே விதி மாறித்
- தீருமே ஸ்ரீ சத்திய சாயி உன் சங்கல்பத்திலே
- சங்கடங்கள் தீருமே உன் சாந்நித்யத்தாலுமே
- சத்தியத் தெய்வமே சர்வேஸ்வரனே பரப்பிரம்ம
- பரசிவனே பர்த்தித்தலப் பரமேஸ்வரனே
- உமைபாதி பாகனே திருச்செங்கோட்டு வேலனே
- திங்கள் முடி சூடிய சிவமே, சீவனே அருட்தவமே திங்களில்
- திங்களாய்த் திருவாய் அருவுருவா யருள்தர வரவேண்டும் ஈசா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்