செந்தில் சாயிநாதன்
- மனித உருவெடுத்து அவதாரம் செய்தாய்
- இப் பவதாரத்திற்குப் பரப்பிரம்மம் ஆகிவிட்டாய்
- செந்தில் சாயிநாத பகவானே சொந்தமாயுனைக்
- கவிபாடப் பந்தமாய் வரம் அருள்வாயே
- பாந்தமாய் உன் கரிசனத்தைக் கருணையாய்த் தருவாயே
- விந்தையாய் நிகழும் உன் அனுபூதிகளை எந்தை
- முந்தையாய் முகவரி கூறி முன்னிற்பாயே
- சாயி கந்தனாய்க் கடம்பனாய்க் கதிர்வேலவனாய்
- கயிலை நாதனின் இளைய மகவாய்
- இனிமை தர வருவாயே
- சிவ குருநாதனின் முதல் மகனாய் ஆனைமுகனின்
- தம்பியாய் ஸ்பரிசனம் சம்பாஷனம் உன்
- தரிசனம் காண வரம் தருவாய்
- சத்தி பாலகனாய் சிவசக்தி சொரூபமாய் இதயக்கோயிலில்
- சிம்மாசனத்தில் வீற்றிருந்து காத்தருள வேண்டும்
- நோயற்ற வாழ்வு பெற்று மேதினியில் உயிர்கள்
- மகிழ்ந்து வாழ வேண்டும்
- பசிப்பிணி போக்கி சாயி அன்னபூரணியே – நீ
- அன்னம் பாலித்தருள வேண்டும்
- அனைத்துச் சேவைப் பணிகளும் அணிவகுத்து
- அழகழகாய்த் தொடர்ந்து நடந்திட,
- நடத்திட உன் சங்கல்பம் என்றும்
- துணையாய் வரவேண்டும் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்