செந்தில் சாயிநாதன்

  • மனித உருவெடுத்து அவதாரம் செய்தாய்
  • இப் பவதாரத்திற்குப் பரப்பிரம்மம் ஆகிவிட்டாய்
  • செந்தில் சாயிநாத பகவானே சொந்தமாயுனைக்
  • கவிபாடப் பந்தமாய் வரம் அருள்வாயே
  • பாந்தமாய் உன் கரிசனத்தைக் கருணையாய்த் தருவாயே
  • விந்தையாய் நிகழும் உன் அனுபூதிகளை எந்தை
  • முந்தையாய் முகவரி கூறி முன்னிற்பாயே
  • சாயி கந்தனாய்க் கடம்பனாய்க் கதிர்வேலவனாய்
  • கயிலை நாதனின் இளைய மகவாய்
  • இனிமை தர வருவாயே
  • சிவ குருநாதனின் முதல் மகனாய் ஆனைமுகனின்
  • தம்பியாய் ஸ்பரிசனம் சம்பாஷனம் உன்
  • தரிசனம் காண வரம் தருவாய்
  • சத்தி பாலகனாய் சிவசக்தி சொரூபமாய் இதயக்கோயிலில்
  • சிம்மாசனத்தில் வீற்றிருந்து காத்தருள வேண்டும்
  • நோயற்ற வாழ்வு பெற்று மேதினியில் உயிர்கள்
  • மகிழ்ந்து வாழ வேண்டும்
  • பசிப்பிணி போக்கி சாயி அன்னபூரணியே – நீ
  • அன்னம் பாலித்தருள வேண்டும்
  • அனைத்துச் சேவைப் பணிகளும் அணிவகுத்து
  • அழகழகாய்த் தொடர்ந்து நடந்திட,
  • நடத்திட உன் சங்கல்பம் என்றும்
  • துணையாய் வரவேண்டும் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0