ஏல மாலையிட்டு

 • ஏலவார் குழலி அம்மன் உனக்கு ஏலமாலையிட்டு
 • ஏகமனதாய்த் தொழுதிட்டால் ஏகனனேகன்
 • பாதியே பர்வத நாயகிப் பார்வதியே செங்கோட்டீசனின்
 • சரிசமமே உமையாளே ஆபத்சகாயனி
 • ஆத்மார்த்த நாயகியே ஆதியின் பாதியாய்
 • பாகம்பிரியாளுனை ஆதி சக்தியாய்த்
 • தொழவே ஸ்ரீ சிவசக்தி சாயிமா வாஞ்சையுடன்
 • வந்தே வரமருள் வாயே
 • குற்றாலீஸ்வரர் குழல்மொழிவாயம்மை இமயவான் புதல்வி
 • பிரம்மராம்பிகைத் தாயே அமரபனீஸ்வரனுடை
 • வேதநாயகித் தெய்வமே ஆயிரமாயிரம் பெயர்களில்
 • உனையழைத்திட ஆனந்தம் பெருகிக்கண்ணில்
 • நீர் வழிந்துள்ளம் கசியுமே
 • அருளிடத்துணை வருவாயே, ஸ்ரீ சத்யசாயினிமா

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0