சாயி சக்தி

 • ஆழ்கடலின் ஆழத்தில் மௌன ரூபமாய் சாயி சக்தி
 • ஆனந்தத் தாண்டவத்தின் அற்புத வடிவமாய் சாயி சக்தி
 • ஆலால கண்டனின் அன்புக்கருணையாய் சாயி சக்தி
 • சொற்பதம் சுகம் தந்து அகம் மகிழ்விக்கும் சாயி சக்தி
 • பொற்பதம் தந்து ஆத்மாவில் ஆனந்திக்க வைக்கும்
 • அனந்த சாயி சக்தி
 • மாதா பிதா குரு தெய்வம் சகா வாய்ச்
 • சகலரையும் காத்து நிற்கும் சாயி சக்தி
 • மானிட அவதாரத்தில் மாட்சி தர வந்த அன்பு மலர் சாயி சக்தி
 • ஆடி மாதம் தேடி வந்த அதிசய அற்புதமாம் சாயி சக்தி
 • கூடி வந்த பக்தர்களின் குறை தீர்க்கும் சாயி சக்தி
 • நாடி வந்தோர்க்கு நற்பவி நல்கும் பர்த்தீஸ்வரி சாயி சக்தி
 • பாடி வந்தோர்க்குப் பரம பவித்ர சுகமளிக்கும் பரசிவசாயி சக்தி
 • ஓடி வந்த துக்கமெலாம் தீர்த்து விலக்கி வைக்கும் சாயி சக்தி
 • வியாழனில் வியாழனாய் வந்த ஸ்ரீ சத்யசாயி சாயி சக்தி
 • நீயிருக்கக் குறையேதுமில்லை ஸ்ரீ சிவசக்தி சத்ய சாயி சக்தி

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0