முப்போதும் வருவாயே

  • திருப்பாவை ஆண்டாள் நாச்சியாரின் ஆத்ம பக்தியில்
  • அகிலம் உறையும்
  • மாணிக்கவாசகரின் திருவெம்பாவையில்தான்
  • ஆத்மார்த்த பக்தியில் அன்பர்களுள்ளம் நிறையும்
  • அலை கலை மலைமகளாயுனைத்துதித்திடும்
  • அத்தியந்தப்பக்தர் களுள்ளம் உருகிடும்
  • திரு உன் வடிவத்திலே அவரவர் தெய்வ மாயகமதில் தெரியும்
  • உன்னன்புக்கருணைக் கொடையால்தானே, தானே புரியும்
  • உன் இறங்கலும், இரங்கலும், உணரும்
  • பாவை நோன்பும், மார்கழித் திங்களில் பர்த்தியில்
  • நகர சங்கீர்த்தனம், நாம ஸ்மரணை, கீர்த்தனைகள்,
  • பல்லக்குப்பவனி பாரெல்லாம் உணர்த்தும்
  • தேடிவந்துனைத்தொழுதிட உன் அன்பர், பக்தர்,
  • அடியார் கூட்டம் குவியும், குதூகலிக்கும்
  • எப்பெயரில் இப்போது முப்போதுமெப்போம் உனை
  • அழைத்தாலும் நாடிவந்து காத்தருளும்
  • ஸ்ரீ சத்திய சாயி தெய்வமே உனக்கு
  • ஆத்மார்த்த, ஆனந்த, வந்தனம் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0