சத்தியத் தேரோட்டி

  • சத்தியத்தேரோட்டி சனாதன சாரதியாய் வந்திட்டாய்
  • நித்திய தர்மமதைத் தழைத்திடவே செய்திட்டாய்
  • அவதாரமாய் அவனியில் வதரித்து பவதாரமாகி நின்றாய்
  • அணுவுக்குள்ளணுவாகி அண்ட மதைக் காத்திடத்தான்
  • சிவசக்தியாக வந்தாய்
  • பிருந்தாவனப் பெருமானே நந்தவனத்தின் நந்தகோபனே!
  • ஆநிரை மேய்த்திட்ட ஆயர்பாடியனே ! அரி அரனே !
  • திருந்தா வுள்ளத்தையும் திருப்தியுடன் திருந்த வைத்தும்
  • பொருந்தா மனத்தினிலும், புரிந்து வந்து கருணை செய்தும்
  • வருந்தாமல் வாழ்வியலில், வாழ்வாங்கு வாழவேதான்
  • வழி செய்கின்றாய்
  • இருந்தே உடன்நல்விருந்தாய், உயிரிலே கலந்துள்ளாய்
  • ‘நானிருக்கப் பயமே’னென்று நல்வாக்குமே தந்து விட்டாய்
  • ஸ்ரீ சத்திய சாயிநாத தெய்வமே உனக்குக் கோடிகளில்
  • ஆத்மார்த்த வந்தனங்கள் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0