மனதோடு உறவாடி

  • மயில் மீது ஏறி வருவான் சாயி முருகன்
  • நம் மனதோடு உறவாடி மகிழ்வான் அந்த மால்மருகன்
  • திருப்புகழைத் துதிபாடச் செய்வானந்தக் குமரக்கந்தன்
  • அழகு சுப்ரபாதம் பாடத் துயில் எழுவானந்த சாயி வேலாயுதன்
  • குன்றுதோறும் நின்றாடும் பேரழகனவன்
  • கன்றுபோலப் பாசமிகும் வேலனவன்
  • மன்றில் ஆடும் ஈசனின் இளைய புதல்வனவன்
  • அன்றலர்ந்த பூவாயருள் வழங்கும் கார்த்திகேயன்
  • பார்த்தனும் பரமனும், பரசிவனும், சாயீசனுமாய்ப்
  • பர்த்தி சுப்பிரமணிய சுவாமியுமாய், எப்பெயரிலழைத்தாலும்
  • சுபக் கீர்த்தி வழங்கும் சரவணன், குகனவன்
  • கார்த்திகை தீபச் சுடரொளியின் கார்த்திகேயன்
  • பூரண நிலவொளியின் பூர்ணிமையான வடிவேலன்
  • நாரணன் நான்முகன் தத்தாத்ரேய சிவ ஸ்வரூப சரவணன்
  • பிரணவப் பொருளுரைத்த சிவனுக்குக்கும்
  • குருவான சுவாமிநாதன்
  • முக்தி, சக்தி, பக்தியளித்து நற்பவியளிக்கும் சேந்தன்
  • வினை நீக்கி விந்தை புரியும் சண்முகன் சன்மதன்
  • பிரசாந்தி சிவசக்தி ஸ்வரூபப் பரப்பிரம்மம் ஸ்ரீ சத்திய சாயிநாத
  • சக்தி மைந்தன் சாயி தேவசேனாபதி சரணம் போற்றி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0