பலம் தருகவே

  • சீர்மிகு பர்த்தியின் சிறப்புன் மகத்துவ மகிமைத்துவமே பாபா
  • பாரெலாம் பக்தர்களின் பரவசப் பரிபூரணமே
  • சரணம் சாயிநாதா
  • அதில் சேர்வினையகற்றி அல்லனசேரா வண்ணமாய்த்
  • திண்ணமாய் ஆட்கொள்வதுன் கருணை தானே ஈசனே
  • சோரும் மனதிலும் தீர்விலா நிகழ்விலும் சோம்பல்
  • துயர்தனிலும் சேர்ந்து வந்து காத்தருள்வதுன்னருட்
  • கடாட்சமே சாயீசா
  • இம்மை மறுமை இகபரசுகம திலிறுதிவரையிலுமே
  • உனது துணை தவிரவேறேது சுவாமி
  • அருகிலும் சுற்றிலுமகிலமனைத்திலும் அருவமாய் உள்ளாய்
  • இறங்கி, இரங்கியேதானே, நீ தானாய், வருகிறாய்
  • தயை செய்கிறாய், தாயாய்த் தெரிகிறாய்
  • முந்தை முன்னையாய் எந்தை தந்தை குரு தெய்வமாய்ச்
  • சகாவுமாய் சகலமும் சர்வமுமாகிறாய்
  • என்று மெங்கு மெதிலுமுயிருணர்வா யுள்ளாய்
  • பஞ்சபூத வளிவெளிமண்டலத்தில் சாஸ்வத சாந்நித்திய
  • மான சத்தியமாய்ச் சங்கல்பிக்கிறாய்
  • ஸ்ரீ சத்திய சாயீஸ்வரா. திங்களே எங்களின் இதய உதய
  • ரத்னாகரகுலச் சூரியனே சர்வேசா
  • தரிசனம் தரக்கரிசனமாய் வருக உன் ஸ்பரிசன
  • நயன தரிசன வரம் தருக, பலம், பலன், பயன் தருக.
  • அபயஹஸ்த அருளாசியுடனுன் பதமலர் தரிசனம் தருகவே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0