தருவாயே நற்பவி
- ஏழ்பிறப்பும் தொடர்ந்துவரும் பரப்பிரம்மம் நீயே
- ஊழ்வினை களற்றிவிட உதவுவதும் நீதானே
- பாழ்மனதில் மும்மலங்கள் சேராமற் காத்தருள்வாயே
- உன் மலரடி தஞ்சம்புகுவோர்க்குத் தாழ்ந்து
- தயை செய்யாமல் விரைந்தருள் தந்து
- தான்தயை செய்தேகாத்தருள்கிறாய்
- தருவாயே நற்பவியாம்நற்கதியாய் உன் கருணையும்
- அபயஹஸ்த ஆசியுமே
- மண்ணுக்கும் விண்ணுக்கும் பரம்பொருள் நீயே
- கண்ணுக்கும் கருத்துக்குமான கருப்பொருளுமாய்த் தானே
- தண் நிலவின் குளிர்ச்சியாய் அன்பு மழை பொழிகிறாய்
- தன்னிகரிலாக் கருணையால்
- வரும் துன்பங்களைத் தீர்க்கிறாய்
- எண்திக்கும் துணை நின்று ஏற்றமதுவும் தருகிறாய்
- உனது பண்பாடி நாம ஸ்மரணை
- ஆத்ம சேவைகளாற்றி மகிழ்கிறோம்
- சஞ்சல மனதைப் பவித்திரமாக்குகிறாய்
- சஞ்சீவியா யருமருந்தாயுன் அனுபூதி விபூதியளிக்கிறாய்
- ஸ்ரீ சத்திய சாயி நாத தெய்வமே
- உன் மலரடி சரணம் போற்றியே சரணாகதி சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: