சர்வமதம் சம்மதம்
- தொண்டருக்குத் தொண்டனான
- ஸ்ரீராம ஆஞ்சநேய அனுமனும்
- அடியார்க்கும் அடியேனாகிய சிவம் சித்தனாயும்
- அன்பர்க்கு அன்பனாம் அருள்பாலிக்கும் தத்தாத்ரேயரும்
- கோபியர் கோபர்களுக்குப் புனிதப்பிரேமை அன்பு
- விதைத்திட்ட, ஸ்ரீ ராதா கிருஷ்ணணாயும்
- தாய்க்குத் தாயாய் மும்மாரி பொழிவித்து குலம்காக்கும்
- சாயி மாரித்தாயாயும்,
- முத்தமிழ்த்தெய்வம் முருகு அழகு செந்தில் வேலவனாயும்
- மும்மூர்த்தி களாம்பிரம்மா, விஷ்ணு, சிவமாகவும்,
- எல்லாம் நிறைந்துள்ள அல்லாவாகவும்,
- இயேசு, புத்த, மஹாவீர ராகவும்,
- அலை, கலை, மலை மகள், ஆதிசக்தி சண்டிகையாயும்
- எப்பெயரில் எப்படியழைத்திடினும் அவரவர்க்குக் காட்சி
- தந்து கடாட்சிக்கும் கருணைத் தெய்வமுந்தன்
- காருண்ய அபயஹஸ்த மளித்திடுமே
- அனந்தகோடிகள் கருணை அன்பு அருளையே
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: