நிலா முற்றத்தில்

  • செவ்வக வடிவ நீள்முற்றம்
  • அண்ணாந்து மேலேபார்க்க முழுநிலவு முற்றும்
  • வெண்நிற வெண்ணிலா வெட்டவெளி
  • செவ்விளநீரின் குளுமையாய்ப் புன்முறுவலுனதாய்
  • ஓ! நம் சுவாமி
  • செவ்வங்கிதனில் தங்கம்நிற ‘பங்காரு’ என்றழைத்திடும்
  • நம் சுவாமி
  • செண்பக மணத்துடன் தென்பொதிகைத் தென்றல் சுகந்தம்
  • செந்தாமரைப் பாதம் நினைக்கச் சிந்தூரமாய்ச் சுந்தரப் பாதம்
  • பந்தமாய்ப் பார்க்கும் பிரேமைப் பார்வையில்
  • பாந்தமாய்த் தெரியும் பாசமான போர்வையில்
  • எங்கள் சொந்தம் நீமட்டும் தானென்று
  • நினைத்திடும் கோர்வையில்
  • பரப்பிரும்மம் உன்னில் தீர்வாய்ச் சேர்கையில்
  • அது பிரசாந்தியில் பிரவேசமாகிறது
  • கார்முகில்களின் நகரும் மேகக்கூட்டத்தில்
  • கண்சிமிட்டும் நட்சத்திரக்கூட்டங்களில்
  • நீல வண்ணக் கண்ணனைக் காண எண்ணமெழுகையில்
  • நீலமேகச் சியாமளனாய் நித்திலமாய் வேணுகான மிசைத்திட
  • வேய்ங்குழலூதி நீ வந்தாயே சத்யசாயி கிருஷ்ணணாய்
  • வேல்கொண்ட கையில் மயில் வாகனத்திலேறி மயூரனாய்
  • வில்லேந்திய கரத்துடன் சீதா சமேத இலக்குமணனன் சகித
  • அனுமனுடனான அழகுக்கோலத்தில் ஸ்ரீ சாயிராமனாய்
  • சங்கு சக்ரமேந்தி ஸ்ரீதேவி பூதேவியுடனாய்க்
  • கருடவாகனத்தில் மகாவிஷ்ணுவாய்
  • சிவசக்தி ஸ்வரூப லிங்கோத்பவனாய்
  • கயிலைக்காட்சியில் ஸ்ரீ சைலேஸ்வர பிரம்மராம்பிகை
  • ஸ்வரூப ஸ்ரீ சாயீஸ்வரனாய்
  • வீணாவாணி கலைவாணியாய், பிரம்மபத்தினியாய்
  • வெண்தாமரையில் வீற்றிருப்பவளாய்
  • முத்தேவியராய் முத்தமிழாய்க் கல்வி,
  • செல்வ, வீர சனாதனியாய்
  • தேவி சண்டிகையாய், ஆதிசக்தி, சப்த மாதாக்களாய்ப்
  • பஞ்சபூதங்களாய், அகிலமனைத்தும் ஆட்சி செய்விக்கும்
  • சாயி அன்னையாய் எப்படி நினைக்கினும் பாபா
  • நினைப்பவர்க்கு நினைத்தபோது நினைத்தவாறு
  • காட்சிதருவாய் கற்பனையிலும் கனவு நனவிலும்
  • காட்சி மீட்சி மாட்சியினில் என்பது சத்தியம்
  • சுவாமியுனை முப்போது மெப்போது மிப்போதும்
  • நினைத்திட வரமருள்வாய் சரணம் போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0