பண்பாடு காக்கும்
- உன் திருக்கோயில் வலம்வந்தால் நல்வாழ்வில்
- நலம் பயக்கும்
- நின் திருப்பாதம் தொழுதிட்டால் இல்வாழ்விலினிமை சிறக்கும்
- உன் தேர் நகர்வலம் உலாவரின் நிகரிலா இன்பம் கூடிவரும்
- நின்நாமம் கூறி நிதம் தொழவே நன்மைகள் நாடி வந்திடும்
- உன் சேவைகளாற்றிட ஆத்மார்த்தம் அணிவகுக்கும்
- நின்பக்தத் தொண்டர் கணிவகுப்பில் மானுஷ சேவைகள்
- ஆனந்தமாய் மகிழ்விக்கும்
- உன் அன்பு, அற, அருள், உரை யிவ்வுலகிற்கே
- உன்னதம் செய்விக்கும்
- நின் பஜன் பண்கள் நம் பண்பாட்டைப் பரிசாயளிக்கும்
- உன் கல்விப்பணிகள் கண்களாய்க் காத்து நிற்கும்
- நின் மருத்துவச் சேவைகள் பாரினில்
- பல மகத்துவங்களாற்றும்
- உன் நகர சங்கீர்த்தனத்தில் மனமொன்றி லயிக்கும்
- நின் நாமஸ்மரணையில் பகவத் பந்தம் சித்திக்கும்
- உன் தியான செபத்தில் பிரகாந்தி பிரகாசமாய்க் கிட்டும்
- நின் பிரசாந்தித் தலத்திலுன் பக்திப்பிரவாகம்
- எண்திக்குமெட்டி ஏற்றமளிக்கும்
- ‘நானிருக்கப்பயமேன்’ எனும் மந்திரச் சொல்லில்
- சூட்சுமமிருக்கும்
- நீயிருக்கக்குறையேதுமுண்டோ வென நெஞ்சமதுன்
- கருணையை எண்ணியே சுகிக்கும், சுகமளிக்கும்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: