சாயி கோவிந்தன்
- புரட்டாசி மாசம் சாயி கோவிந்தவாசன் வாசம்
- இரட்டைச் சந்தோஷமளிக்கும் சிரத்தையின் சுவாசம்
- சாயிவேங்கடவனின் பாசம் பவித்திரப் பந்தம், பாந்தம்
- சாயிமாதவனின் விடிகாலைச் சுப்ரபாதம் பிரசாந்தியில்
- ஒலித்திடும் சத்யசாயி ஓம்காரம் சுப்ரபாதம்
- குல்வந்த் ஹாலினில் கேட்டிடும் அதிருத்ரம் வேதம்
- நகர சங்கீர்த்தனம், நாம செபம், நாம சங்கீர்த்தனம்
- அபிஷேக ஆராதனைகள், பஜன்பண்கள், குளிர்காலப்
- பனித்துளியின் குளுமை குளிர்ச்சியென மலர்ச்சியாய்
- அத்தனையும் அனுபவித்து மகிழும் சுகமும் ஆனந்தமே
- சாயிதரிசனம், ஸ்பரிசனம்,
- சம்பாஷணம், நினைத்தால் மனம் ஆனந்திக்குமே
- சித்ராவதியின் அழகும், நம் சுவாமியின் நிறுவனங்கள்
- அனைத்துமே அழகான ஆராதனைகளே
- அவனியில் மார்கழிக் குளிரின் சுகானுபவத்தில்
- கோவில்களின் மணியோசைகளும், மலர்மாலைகள்
- அலங்காரமும், அர்ச்சனைப் பூக்களின் சுகந்தமும்,
- வாசனைகளும், பூசனைகளும்
- பிரசாதங்களின் வகைகளும், சுவாமியின்
- ஆசீர்வாதமும் ஆனந்தமே
- அனந்தனின் திவ்ய நாமங்களும், சகஸ்ர அர்ச்சனைகளும்
- ஆனந்த எல்லையே, இல்லைதானதற்கு எல்லையே
- விடியும் ஒவ்வொரு நாளும் வசந்தத்தின் உச்சமே – நம்
- வாழ்வியலும் உயர்வாய் உய்யுமே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: