தாய் தந்தையாய்
- ஸ்ரீ சத்தியசாயி கோவிந்தா நீ எங்கள்
- நித்திய தாய் தந்தையுமாய் என்றுமே சாயி கோவிந்தா
- மகாபலி சக்கரவர்த்திக்கு வானமளந்தாய் ஓரடியில்,
- பூமியளந்தாய் ஈரடியில்
- சீரடியில் உன் ஈரடி எடுத்து வைத்தாய் சீர்மிகு சிறப்பு தந்தாய்
- பார்போற்ற பர்த்தியைப் பாங்காய் வடிவமைத்தாய்
- பன்மதப் பக்தருக்கும் அன்பில் அரவணைத்து
- மதம், இனம், மொழியால் அன்பு மதம்
- உருவாக்கிக் கருணை செய்தாய்,
- காருண்யமளித்தாய்
- அகிலம் அனைத்தும் சத்சங்கம் வளர வைத்தாய்
- சேவைகள் புரிய வைத்தாய்
- கிராம சேவை, ராம சேவை, மானுஷ சேவையே,
- என மனிதம் மலர வைத்தாய்
- அன்பு அன்பு அன்பு மட்டுமே என
- இதயத்தில் விதைத்து விட்டாய்
- ஆழ் மனதில் புதைத்து விட்டோம்
- ஸ்ரீ சத்திய சாயி கோவிந்தா உன் சங்கமத் திருவடிகளுக்கு
- அனந்த ஆனந்த கோடி வந்தனங்கள் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: