கவிதை 2
பகவான் தன்னுடைய தெய்விகச் சொற்பொழிவுகளைத் தொடங்குவதற்கு முன் பாடியதெள்ளமுதத்தெலுங்குக் கவிதைகள், “ஸாயிவாக்கு ஸத்யவாக்கு” என்ற நூலில்,தொகுக்கப்பட்டிருப்பதைக்குறிப்பிட்டு, பகவான்பாடிய சிலகவிதைகளை தெலுங்குக்கவிதை தமிழ்விளக்கம் என சாயிசங்கல்பத்தால் முன்னர் எழுதியிருக்கிறேன்.
பகவான்தன் தாய்மொழியான சுந்தரத்தெலுங்கில் பாடியிருக்கும் கவிதைகளில் இருந்து இரண்டு கவிதைகளை இங்கே… சொல்ல நினைக்கிறேன்.
அகத்தேடல் என்பது அறவே இல்லாமல் புறத்தேடல்களிலேயே பொழுதைப்போக்கிக் குதூகலித்துக்கிடக்கும் மனிதக்கூட்டத்தைப்பார்த்து பகவான்கேட்கும் கேள்விகளே அறிவுரைகளாக அமைந்த கவிதை இது.
‘ஆடல் பாடல்களிலேயே உங்கள் வாழ்வெல்லாம் கழிந்துவிட்டது இதுதான் வாழ்க்கையென்று நினைத்தீர்களா?’
மூன்றுவேளையும் மூச்சுமுட்ட உண்டு முப்போதும்கிடப்பது தான் வாழ்வென்று நினைத்தீர்களா?
இதற்கா ஆண்டவன் உங்களுக்குப் பிறவியைக் கொடுத்தான்?
களிப்பதும் களைப்பதும் கண்ணயர்ந்துகிடப்பதும்தான் வாழ்வென்று நினைத்தீர்களா?
இதற்கா ஆண்டவன் உங்களுக்குப் பிறவிதந்தான்?
வம்புகளை.. கவைக்குதவாத வாதங்களை நாள்முழுதும் பேசிக்கிடப்பதையா வாழ்வென்று நினைத்தீர்கள்?
அறிவும் விவேகமும் கொண்டிருந்தும்…
அறியாமையால் அஞ்ஞானத்தால் வாழ்வை வீணாக்கலாமா?
இனிமேலாவது மனிதனாக நடமாடுங்கள்.
நல்ல மானிடத்தை உருவாக்குங்கள் என்கிறார் நம்பகவான் சத்யசாயிபாபா.
அவர்பாடிய மொழியிலேயே இப்போது பாட்டைப் படித்துப்பாருங்கள். மரத்து.. மதமதத்துக்கிடக்கும் மனிதர்களுக்கெல்லாம் சுளீர் சுளீரென்று சாட்டை வீசுவது போன்ற பாட்டைப்பாடுகிறார் நம் பகவான்.
- “பனிபாடலந்துனே மீப்ருதுகந்த தெல்லாரே,
- இதியெ ஜீவிதமனி எஞ்சினாரா?,
- மூடுபூடல மீருபுஜியிஞ்சி திருப்திகா,
- இதியெ ஜீவிதமனி எஞ்சினாரா?,
- அலஸடதீரக ஹாயிகா நிதுரிஞ்சி,
- இதியெ ஜீவிதமனி எஞ்சினாரா?,
- இந்துகா தேவுடீ ஜன்ம இச்சினாடு?,
- பனிகிரானி கபுர்லு பகலந்தா மாட்லாடி,
- இதியெ ஜீவிதமனி எஞ்சினாரா?,
- இந்துகா தேவுடீ ஜன்ம இச்சினாடு?,
- தெலிவிதேடலு கலிகியு தெலிய லேக?,
- காலமுனு வியர்த்தம்புகா கடுப தகுனெ?
- மனுஷிகா மீரு இகனைன மஸலரய்ய!”
-ப.119
பா.141
(பனிபாடலந்துனே- ஆடல்பாடல்களில் ; மீப்ரதுகு-உங்கள்வாழ்க்கை; புஜியிஞ்சி-சாப்பிட்டு; பனிகிரானி கபுர்லு- வேலைக்காகாத சமாச்சாரங்கள்)
சரியாக இருப்பவர்களைப் பற்றிப்பேச்சில்லை சரியில்லாதவர்களைச் சரிசெய்வதற்காக சாயிபாடிய சரியானபாட்டே இது..
ஆரோக்கியமாக வாழ்பவர் பற்றிப் பேச்சில்லை. நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கவே நம் வைத்தீஸ்வரன் பாடிய கவிதை இது.நம்ஸ்வாமி சிலர்குறைகளை தனிமையில் சொல்லித்திருத்துவார். சிலர்குறைகளை சபையிலே சொல்லித்திருத்துவார். அதேகுறை கொண்ட மாந்தரும்மாறட்டும் என்றுதன் ‘லெக்சரில்’மருந்து ‘மிக்சரை’ கலந்துகொடுத்திருக்கிறார் நம்ஸ்வாமி.
எப்படிவேண்டுமானாலும் வாழ்வது வாழ்க்கையில்லை. இப்படித்தான் வாழவேண்டும் என்ற வரையறைகளோடு வாழ்வதே வாழ்க்கை என்ற வாழ்க்கைப்பாடத்தை நமக்கு எடுத்திருக்கிறார். ஆசான்களின் ஆசானான நம் அருமை ஸ்வாமி.
அடுத்தபாடலில், நட்பு அமையும்விதத்தை எளியஓர்உதாரணத்தின்மூலம் வலிமையாகக் காட்டி விடுகிறார். மண்ணுடன் சேர்ந்தால் இரும்பு துருப்பிடிக்கும். நெருப்புடன் சேர்ந்தாலோ இரும்பின் துரு விடுபடும். அதுபோல்தான் மக்கள் கொள்ளும் தீய நட்பும் நல்ல நட்பும் அமைகிறது என்கிறார் ஸ்வாமி.
கூடா நட்பைப்பற்றி…
பழையபாடல்கள் பலவுண்டு. காவியக்கதைகளில் பலப்பல சம்பவங்களுண்டு. அதையெல்லாம் நினைவில் கொண்டுவந்து சேர்த்து விடுகிறார் ஸ்வாமி.இப்போது பாடலைப் படித்துப்பாருங்கள்.
- “மட்டிதோசேர இனுமுனு பட்டு துப்பு,
- அக்னிதோசேர இனுமுனு துப்புவீடு,
- ஸஹவஸம்புன இட்டுல ஸம்பவிம்சு
- ஸத்யமுஜூபுபாட ஈஸாயிமாட.”
-ப.47
-பா.45
(மட்டி-மண், இனுமுனு-இரும்பை, ஜூபுபாட-காண்பிக்கும்பாதை)
நல்ல நட்பினால் அடையும் பலனையும் பாதுகாப்பையும், கூடா நட்பினால் ஏற்படும் சீர் குலைவையும்… ராமாயணத்திலும் மகாபாரதத்திலுமே அதிகமாய்க்காண்கிறோம். பல படிப்பினைகளைத் தெரிந்துகொள்கிறோம்.
நிகழ்காலத்திலும் இந்த உண்மை சஞ்சரித்துகொ கொண்டேயிருக்கின்றது.
மிகச்சரியாகக் கவனித்து நட்பைத்தேர்ந்தெடுக்க வேண்டும்.ஏனெனில் அது காலாகாலத்திற்கும் உங்களோடு பயணித்துக் கொண்டிருக்கும். உங்கள்வாழ்க்கைப்பாதையை சுகமான பாதையாக்குவது நல்லநட்பு என்றுதெய்வக்கவி பாடுகிறார் நம்பகவான். பகவான்பாடும் நீதிகள் நமக்குமட்டுமல்ல.. நம் அடுத்தடுத்த தலைமுறைக்கும்…