அருள் நல்கும் அன்னையாய்
- ஐம்பத்தொரு சக்தி பீடத்திலும் ஐயமின்றி ஆட்சி செய்கிறாய்,
- மாட்சிதருகிறாய்
- அருள்நல்கும் அன்னையாய் மீட்சியருள்கிறாய்
- முன்னையாய், முதல்வியாய், அனைத்துயிர்களிளும்
- ஒன்றி நிற்கிறாய்
- அன்பில் அரண் அமைத்துக் காத்து வருகிறாய்
- துன்பத்தில் துணை வந்து இன்பமளிக்கிறாய்
- பழவினைகள் நீக்கிடப் பல்லுருவில் அருவுருவாய்
- வந்து அமைதியளிக்கிறாய்
- அறம், பொருள், இன்பம், வீடு தந்து
- இறுதிவரை நற்பவி நல்குகிறாய்
- மஞ்சள் குங்குமத்தில் மங்காது
- மங்கலமளித்து மகிழ வைக்கிறாய்
- மங்கையர்க்கு விருந்தாயருள் பாலிக்கிறாய்
- சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சையில்
- அறம் அள்ளித் தருகிறாய்
- மாதா, பிதா, குரு, தெய்வச் சகாவாய்ச்
- சகாயமளிக்கிறாய்
- பூமாலைகள் மலர்களிலசைந்து
- உன் னிசைவை உணர்த்துகிறாய்
- பிரசாந்தியும் நீயும் ஒன்றே எங்கள்
- மனச்சாந்தி முழுதும் நீயே
- ஸ்ரீ சத்யசாயி மாதா வுன் பொற்றாமரை
- பாதங்களில் சரணாகதி சரணம் போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்