சாயி கீதா நினைவு நாள்

  • சாயி கீதாவெனும் நாமம் சாய்ராம் விரும்புவது தான்
  • சாயி கீதாவெனும் நாமம் பக்தர் உள்ளத்துள்
  • புகுந்து விட்டதுதான்
  • சாயி கீதாவும் தன் மாதாவாய்ப் பார்த்து வளர்ந்தது தான்
  • சாயி மாதாவுமிப் பூவுலகிற்குமா தவமாய்ப்பூத்த
  • சாயி அன்னைதான்
  • மூன்றடிக்குட்டியாய் வந்த சாயி கீதமே
  • மூன்றடி கேட்ட வாமனனில் சங்கமித்த சாயிநாதமே.
  • முன் ஜென்ம வாசனையாய் வந்த அருமருந்தப்புத்திரி நீ
  • என்றென்றும் பூசனையாம் நம்
  • சுவாமிக்குக்கிட்டிய அருமருந்தும் நீ
  • ராமருக்கு மாதவம் செய்த மந்திகள் ராமர் பாலம்
  • உதவிக்கு வந்தன.
  • கிருஷ்ணருக்கு ஆயர்பாடியில்
  • பசுக்கள் கோவர்த்தனத்திற்கு வந்தன
  • சீதை சென்ற திசை சொல்ல ஜடாயுவும் வழிகாட்ட வந்தது
  • கருடனும் மயிலும் சேவலும் மூஞ்சுறுவும் எறும்பும் நண்டும்
  • அணிலும்கூடச் சரிதையில் வந்தன
  • சுவாமி அன்னையிடம் நீ பழச்சுவை உண்டிருந்தாய்
  • சுவாமி அன்னையிடம் நீ பாதாரவிந்தம் பெற்றிருந்தாய்
  • சுவாமி அன்னையுடன் மட்டும் அன்பு நீ செலுத்தி இருந்தாய்
  • சுவாமி அன்னையுடன் உன்னையும் சேர்த்து
  • வணங்கவும் வைத்து விட்டாய்
  • உனக்கும் ஸ்வாமிக்கும் இருந்த ஒத்திசைவு தான் என்னே!
  • எனக்கும் சுவாமி அன்னை என நீ ஒத்த இசைவுதான் என்ன?
  • சுவாமிக்கு நீ சூட்டிய மாலைகளும் செலுத்திய
  • வணக்கமும்தான் என்னே!
  • சுவாமியின் பக்தி உணர்வு தவிர வேறு எதுவும் இல்லா
  • உன் உணர்வுதான் என்ன?
  • விலங்காய் உன்னை விலக்கிப் பார்த்ததில்லை நம் சுவாமி
  • விளக்காய் உன்னை விளங்கிப் பார்த்த
  • பக்தர்களையும் விலக்கிப் பார்த்ததில்லை நம் சுவாமி
  • அத்யந்த பக்தியில் ஆழ்ந்து வாழ்ந்த சாய் கீதாவே
  • உன்னையும் சுவாமியுடன் நினைத்து நித்தியமும்
  • துதித்திடுவோம் சாயி கீதாவே
  • கீதையின் பாதையில் நடக்கச் சொன்ன நம் சுவாமிக்கு – நீ
  • கீதையாய்க் கிட்டிய வேதமே மாதவமே, மா தவமே !
  • சுவாமியின் பாத மலர் துதித்து வாழ்ந்த உன்னை நினைத்து
  • சாயியின் சாயி கீதமாய்ப் போற்றித் துதிக்கின்றோம்
  • சாயி சரிதையில் விலை மதிக்க இயலாத கவிதை நீ
  • சாயி சரித்திரத்தில் மலையளவு மதிப்புமிக்க சகாப்தம் நீ
  • சாயிகீதத்தில் சுருதி லயம் மிக்க வேதம் நீ
  • சாயி சகாப்தத்தில் மறக்கவொண்ணா மகோன்னதம்
  • நீ சாயி கீதாவே
  • சித்ரா வதியில் சிறப்பாக ஸ்நானம் செய்து மகிழ்ந்து இருப்பாய்
  • பிரசாந்தியில் பிரசாதமாய் சாயி சாந்தி மட்டும் பெற்றிருப்பாய்
  • சுவாமியின் சேவையில் சாதனை பல கொண்டிருப்பாய்
  • மீராவாய் ஆண்டாளாய் சுவாமியை மட்டும்
  • நினைத்து வாழ்ந்து இருப்பாய்
  • சுவாமியுடன் இருந்து நீயும் எங்களைக் காத்தருள்வாய்
  • சாயி கீதாவே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0