நன்றிக் கடன்
நதியின் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட எறும்பு ஒன்று, வறண்ட இலைமீது அமர்ந்துகொண்டு அதைக் காப்பாற்றும்படி தனது மிகச்சிறிய இதயத்திலிருந்து இறைவனுக்குக் குரல் கொடுத்தது. அப்போது பறந்துகொண்டிருந்த பருந்து ஒன்றை இறைவன் அழைத்து, நீரில் பாய்ந்து அந்த இலையைத் தன் அலகால் எடுத்துக்கொண்டு மேலே எழும்படித் தூண்டினார்.

ஏனெனில், ஏற்கனவே இறைவன் அந்த இலையைப் பறவையின் கண்ணில், மீன் அல்லது தவளையாக காட்சியளிக்கும்படி செய்திருந்தார். பருந்து மிகவும் ஏமாற்றம் அடைந்தது. ஆனால் வறண்ட நிலத்திற்கு வந்த எறும்போ மகிழ்ச்சியுற்றது.

இறைவன் பருந்தாக வந்து தன்னைக் காப்பாற்றியதாக அது உணர்ந்தது. அந்தப் பறவைக்கும், மற்றுமுள்ள பறவைகளுக்கும் நான் நன்றியுடையவனாக இருக்க வேண்டும் என்று அது முடிவு செய்தது. ஒரு நாள் அந்த எறும்பு தனது காலை உணவைத் தேடிச்சென்றபொமுது, ஒரு வேட்டைக்காரன் பறவை ஒன்றின்மீது அம்புவிட முயல்வதைப் பார்த்தது; தன்னுயிரைக் காப்பாற்றியது ஒரு பறவைதான் என்பதை நினைவில் கொண்டு அந்த எறும்பு, வேட்டைக்காரன் அம்பை எய்தும் தருவாயில் அவனுடைய குதிக்காலைக் கடித்தது; அதனால் குறி தவறி விட்டது. பறவையும் பறந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டது. எறும்பு தன்னுடைய நன்றிக் கடனைத் தீர்த்து விட்டது.
Help Desk Number: