முத்தேவியராய்

  • வீசுகின்ற தென்றலிலும் உன் மென்மை நடை நளினம் அழகு
  • வாசமுள்ள மலர்களிலும் உன் சுகந்த மணம் அழகின் அழகு
  • நேசமுள்ள மனதினிலுன் அன்பு ஊற்று பெருகி நின்று
  • கருணை அளிப்பது பேரழகு
  • பாசமுள்ள மனிதனாய்ப் பிரேமையில் வாழ நீ
  • பணித்தது மகாப் பேரழகு
  • சிவசக்தி சாயிமாவாகக் காட்சியளிக்கிறாய்
  • பவதாரிணியாய்ப் பார்தனில் பவனி வருகிறாய்
  • தவக்கோலத்தில் குமரியன்னையா யருள்பாலிக்கிறாய்
  • அரி சோதரியாய் அகிலம் முழுவதும் ஆட்சி செய்கிறாய்
  • மதுரை மீனாட்சியும், குழல்மொழி வாயம்மை,
  • முத்தேவியராய், சிவசக்திஸ்வரூபிணியாய்ச்
  • சேவை சாதிக்கிறாய்
  • பிரசாந்தி வாஸினி பர்த்தீஸ்வரியாய்ப் பரமேஸ்வரியாய்ப்
  • பரிவு காட்டுகிறாய்
  • செவ்வாயில் உன் திருச்செவ்வாய் மலர்ந்தருளாசி
  • நல்கிடுவாய் ஸ்ரீ சத்யசாயி மா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0