புதுப்பாதை

  • புது யுகம் படைத்துப் புதியபாதை வகுத்துத் தந்தாய்
  • கலியுகம் கடந்தாலும் உன் சரிதம் என்றும்
  • நிலைக்கச் செய்தாய்
  • உள்முகம் நோக்கியுனைக் காணச் சொன்னாய்
  • உண்மை முகமாய் மட்டும் உலகியலில் வாழச் செய்தாய்
  • மனம் மெய் மொழியில் மாற்றமிலாமல் வாழ
  • மாண்பு செய்தாய்
  • குணமெனும் குன்றேறி ஒற்றுமையில் நின்றுன்
  • அன்புப் பிரேமையில் சேயாய் மலரச் செய்தாய்
  • தனம் மட்டுமென்று எண்ணி வாழாமல்
  • தயையுடன் வாழ்ந்திட உரைவகுத்தாய்
  • சுவாமியுன்னுடன் வாழ்ந்த இக்காலமெங்களின்
  • பொற்காலமே
  • உன்னை உயிரிலே வைத்துத் தொழுதலுமெங்களின்
  • நற்காலமே
  • கற்கால முதல் இக்காலம் வரை நீ நடத்திய
  • நாடகப்பாத்திரமும் சூத்திரமும் நீயானாய்
  • எக்காலமும் நீ முக்காலமும் வந்து காத்தருள்கிறாய்
  • பிரசாந்திக் கருவறைத் தெய்வமே கலியுகக் கண்கண்ட
  • தெய்வமே பிற சாந்தி வேண்டாம்
  • உன்பிற காந்தி மட்டும் போதும்
  • மறைபோற்றும் தெய்வமே நீயிருக்கக் குறையேதுமில்லை
  • யுன்னருட் கருணையிலே கரையாதுமில்லை சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0