புத்தம் புதுப் புதினம்
- புத்தம் புதிய புதினமாத் தெரிகிறாய்
- நித்தமொரு புனருத்தாரணமாய்த் திகழ்கின்றாய்
- சப்தமதிலொலியாய்ச் சங்கினில் ஓம்காரமாய்ச் சகலமுமான
- பரப்பிரும்மமா யுறைகிறாய்
- ஸ்ரீ சத்யசாயி ராமன் நீ இருக்குமிடமே எங்களின் அயோத்தி
- பிரசாந்தியே பிருந்தாவனம், சித்திரவதிதான் யமுனா
- தீரம் சரயுவின் சாரம், மதுரா பிருந்தாவன மாயம்,
- நந்தகோப கோகுலமே கோகுலம்
- சைதன்ய ஜோதியே சனாதன தர்ம சோதி
- கற்பகத் தருவே காமதேனுவாக பன்மதப் பக்தர் கூடும்
- பர்த்தியம்பதியே அதியற்புதக்
- காசித்தலமாக ஒளிர்கின்றது
- கங்கையின் புனிதம் மனிதத்தில் மலர்கிறது
- ஸ்ரீ சத்ய சாயி ஸ்வரூபிணியாய் அன்னபூரணியாய்
- அட்சய பாத்திரமாய்ச் சாந்நித்ய மளிக்கிறது
- பத்ராச்சலம் ராமனாய்ப் பத்திரமாய் எங்களைக் காக்கின்றாய்
- ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன ஸ்வாமியாய்
- உன் அபயஹஸ்த மருள்கிறாய்
- அருணாச்சல அண்ணாமலையாராய்
- அருள்நிதி நற்பவி அருள்கின்றாய்
- குறையொன்றுமில்லை நீயிருக்கையிலே
- சுவாமி போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்