பிரசாந்தி பாலசுப்பிரமணியம்

  • மயிலேறி வருவானந்த முருகன் மலைக்
  • குன்றுதோறும் நின்றருள் தருவானந்தக் கந்தன்
  • மனதோடு பேசி மகிழ்விப்பானந்தக் குமரன்
  • ஒவ்வொரு பக்தியிலும் பக்தருள்ளும்
  • பரிமளிப்பானந்த வேலன்
  • மடிமீது குழந்தைபோல் தவழ்வானவன்
  • மருள்நீக்கி, யிருள் போக்கித் தருவானந்தச் சேந்தன்
  • படிகளேறித் தொழுதாலவன் பாங்காயருள் தருவான்
  • இடிமின்னலாயிடர்வரினும் வாழ்வி லிதமாய்
  • இன்னல்களைந், தினிமையே, தருவானந்த மால்மருகன்
  • ஆறுபடைவீடுகளில் அர்ச்சனம் ஆயிரம் பெயர்களிலே
  • பர்த்தியில் ஸ்பர்சனம், தரிசனம், சம்பாஷனம்,
  • கோடான கோடிப் பேர்களில்
  • ஆயிரம் நாமங்களில், சாயி முருகனாய்ப் பிரசாந்தி
  • சுப்பிரமணியசுவாமி, யாயந்த ஸ்ரீ சத்யசாயி சரவணபவ
  • தேவசேனாபதியைத் தொழுது மலரடி பணிவோம்
  • சரணம் சரணம் சாயி சண்முக சன்மதனே போற்றி போற்றி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0