மலர் மன்னன்
- ஆன்மீகத் தேடலில் ஆனந்தம் வளரும், மலரும்
- அனந்தன் உன் திருவடியில் அகிலமெல்லாம்
- மகிழும், மனங்குளிரும், முகிழும்
- தினம் உந்தன் தரிசனத்திலுன்திவ்யரூபம் தெரியும், தெளியும்
- திண்ணமாய் வாழ்வியலில் வாழ்வாங்கு
- வாய்க்கும், நற்பவி நல்கும்
- எண்ணமெல்லா முன் எண்ணிலடங்கா
- அற்புதத்தை அதிசயித்து, ஆனந்திக்கும்
- வண்ணமெல்லாமுன்வடிவமென்று வாழ்த்துப் பாப்பாடும்
- கண்ணனாய், இராமனாய்ச், சிவமாய், கோவிந்தனாய்,
- கோபாலனாய்க், கோலங்கள்தான்
- காணுமதிலுன்னருள்தான் போலும்
- வண்ணமய, மலர்களால் மகுடம் சூட்டி
- மலர்மன்னனுனக்கு மகிழ்வாய்த் தானளிக்கும், களிக்கும்
- ஆழ்கடலினமுதமுத்துக்களுந்தன் அருளுரைகள்
- ஏழ்பிறப்பினதிசயங்களுனதன்பு மதமொழிகள்
- வாழும் வரை குமுதமாயுன்சனாதனக்
- குளத்தில் மலரும், வளரும், துலங்கும்
- முகிழ்த்தெழுந்து முத்துப்போலுன் சனாதனச்
- சத்துக்களில் சத்தியத்தை வளர்க்கும், வாழும், வாழ்த்தும்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்