நகர்வலத்தினுள்

  • வான்முகில்களின் நகர்வலத்திலுன் வியாபகப்
  • பிரதட்சணம் தெரிகிறது
  • நீல மேகங்களின் ஊர்வலமுன் கார்மேக வண்ணமதை
  • நினைவு கூர்கிறது, பிரத்யட்சமாகிறது
  • பாடும் குயிலின் இனிமை, அதன்கானம் நீதான்
  • என்றுணர்த்துகிறது
  • வீசும் தென்றலின் சுகத்திலுமுனைத் தரிசித்த
  • சுகானுபவம் புரிகிறது
  • தெய்வீக உன் தரிசனம், ஸ்பரிசனம், சம்பாஷனத்திலுன்
  • இப்பிறவிப்பயன் உணர்கிறது
  • நீ பணித் திட்ட சேவைகளாற்றிட ஆத்மா நெக்குருகும்
  • ஆத்ம ஆகர்ஷணம் தெரிகிறது
  • நான்கு யுகமும், மூன்று உலகங்களும், எங்கும் எதிலும்
  • பரப்பிரும்ம, முனைத்தொடர, உயிர் நினைக்கின்றது
  • இப்பிறவிப் பயனுன்னவதார காலத்திலென்று சந்ததியே
  • நன்றிகள் நவில்கிறது
  • இப்பிறப்பில் உன் மகிமைகள் கேட்டு, கண்டு, பார்த்து, படித்து,
  • உணர்ந்தவை, எண்ணிலடங்கா எண்ணிக்கைகளே
  • உலகு, உயிர், இறைவன், அனைத்தும் நீயே சுவாமி
  • உன் பாதாரவிந்தம் தொழுதிட ஆதாரமாய்
  • நீ சேதாரமின்றிக் காத்தருள வரவேண்டும்
  • ஸ்ரீ சத்ய சாயி தெய்வமே
  • உனக்கு ஆனந்த வந்தனம் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0