தூது செல்வாயா வெண் புறாவே
- அவதாரத்திருநாளில் அன்புத் தூது சொல்லச்
- செல்ல வேண்டும் வெள்ளைப் புறாவே – நீ
- யாதும் சாயிநாதனென்றும் சொல்லு
- சொல்லிவா நல்புறாவே
- ‘நானிருக்கப் பயமேனெனச்’ சொன்ன நம் சுவாமிக்கு
- நீ இருக்கக் குறையில்லையெனச் சொல்லி வருவாயே
- அன்பு மதம் அன்பு மொழி அன்பு இனமாய்
- வாழ்வியல் வாழ்ந்திட
- சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சை வழியில் நடந்திட
- மனம், மெய், மொழியில், சாயி சேவையாற்றி வாழ்ந்திட
- சனாதன சாரதியாய் – நீ வழி நடத்துவாயேவெனத்
- தூது சொல்லி வருவாயே செல்லப் புறாவே
- வெள்ளை ஆடையில் சத்யம் தர்மம் சாந்தி பிரேமை
- அகிம்சையாய் வாழவேண்டும் என்று நித்ய சத்ய
- அருளுரை உரைப்பாயே என்று இனிய சொல்லாய்ச்
- சொல்லி வருவாயே என் வெண்புறாவே
- வெண்ணிற அங்கியில் வெள்ளைப்புறா என்னைப்போல்
- கூட்டமாய் வெண்ணிற மேகமாய்த்தான் வருவாயே
- உன் அவதாரப் பிறந்த நாளில் என்றும் சொல்லி வா புறாவே
- வெள்ளி ஊஞ்சலில் நீ அமர்ந்தாடும் ஜூலா அழகும்
- எங்களுக்கு விடிவெள்ளிபோல்தான்
- எனவும் கூறி வருவாயே என்னன்புப் புறாவே
- சுவாமி உனது அவதார நாள் இன்று
- அனைவரையும் காத்தருள வேண்டும்
- என்றும் எங்களுடன் துணையிருந்து அருள்புரிய வேண்டும்
- பவதாரமாய் இருந்து உன் அவதார மகிமையை
- அனைவரையும் உணரச் செய்ய வேண்டும்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்