ஸ்ரீ சாயி சரஸ்வதியே
- அறிவியல்துறைக்கு எக்காலமும் பொருந்தும்
- சிறப்புடைதேவி சாயிகலைவாணியே வருகவே
- வெண் தாமரை மலரில் வீற்றிருந்து தாவரவியலுக்கு
- அழகு சேர்த்தாயம்மா சாயினிமா
- சாயிமாதா கலைவாணிமா சரஸ்வதியே வருக வருகவே
- அன்னவாகனத்தில் விலங்கியலுக்கு அலங்கரித்
- தருளினாயோ ஏட்டுச்சுவடிகள் கையிலேந்தி
- மொழிகளின் அடையாளமாக அற்புதம் செய்தாயோ சாயிமா
- மீட்டும் வீணைதனில் அதன் ஒலியில் கலைகளின்
- கடாட்சம் கொண்டாயோ ஆயகலைகளை
- உலகிற்கு உணர்த்தினாயோ பர்த்தீஸ்வரிமா
- ஜெபமாலையினைக் கையிலெடுத்துக் கணக்கியலில்
- புதிதாய்க் கணிதத்தின் குறியீடு தந்தாய்
- சாயி பரமேஸ்வரி மாதா
- பேச்சு, அறிவு, கல்வி வித்தையில், கொலுவிருந்து வாக்தேவி
- யெனப் பெயர் கண்டாயோ பிரம்மஸ்ரீமா
- ஸ்ரீ சத்ய சாயிமா நவராத்திரிநன்னாளில் நலம் நல்க
- நற்பவி யளித்திட நற்றமிழாய் முத்தமிழாய்ப்
- பைந்தமிழாய்த் தீந்தமிழாய்ச் சிருங்காரமாய்ச்
- சீலமளித்திட வருவாயுன் கருணையளித்திட
- ஸ்ரீ சத்யசாயி சரஸ்வதி மாதாவே சரணம் தாயே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: