ஆங்கிலப் புத்தாண்டு தினம்

  • விடிவெள்ளியாய்த் திருவாதிரையில் அவதரித்து ஆன்மீக
  • விடியல் ஆகினாய்
  • வியாபகமாய் அவனிதனில் திருவிளக்கின் வெளிச்சமாகினாய்
  • விரும்பியுனைத் தொழுதிட நல்விளக்கமாயினாய்
  • அடிக் கரும்பின் சுவை போலுன்னடி தொழுதிடப்
  • பக்தியிலுருவாக்கினாய்
  • புத்தாண்டு பிறந்து புதுப்பொலிவாய் மலரட்டும்
  • புத்தம்புதுப்பூவாய்ப் பூத்துன் னருள்மணம் பரப்பட்டும்
  • நித்தமொரதிசய ஆனந்த அற்புத முன்னால் பெருகட்டும்
  • அது ஸ்ரீ சத்திய சாயி நாதனென்ற நாமம் பாடியே மகிழட்டும்
  • எண்ணில், எண்ணத்திடங்கா அதிசயங்களாற்றுகிறாய்
  • மண்ணில் நல்லவண்ணம் வாழ்வியல் வாழ வைக்கிறாய்
  • சொல்லில் நினைவில் உன் நாமஸ்மரணையில்
  • நற்கதியளிக்கிறாய்
  • உன்னிலுறைந்திட்ட உன்னன்பில் மலர்ந்திட்ட
  • பக்தரைக் காக்கிறாய்
  • பாரத அன்னை மகிழப் பர்த்தியம்பதியைப் பன்னாட்டுப்
    பக்தர் பார்க்கச் செய்தாயுனை நிந்தித்தோரையும்
    பக்தியுடனுன்னடி தொழுதிடப்பணித்தாய்
    உலகத்தோர்க்கும் சத்ய தர்ம சாந்தி பிரேமை
  • அகிம்சைப் பாதை காட்டிட்டாயுனைச் சிந்தித்த, சந்தித்த,
    பக்தர்களுக்குன் கமலமலர்ப்பதமலரடிதந்திட்டாய்
    கடந்தவை கடந்திடட்டும், காலங்கள் மாறட்டும்,
    துயர்கள்தீரட்டும், நடப்பவைகள் நல்லவைகளாய், அல்லன
  • கடப்பதா யருள்தந்தே நீயாட்கொள்ள வேண்டும்
  • வையத்தி லனைத்துயிர்களிலு முன்னருட்ருணை
  • யன்பு தொடர வேண்டும்
  • நெஞ்சத்தில் நீ அகலாமல் நினைத்தபோதுனை யழைத்திடத்
  • தான் வந்திடவேண்டும்
  • சனாதன தர்மம் தழைத்து மனிதரில்
  • மனிதம் நிலைத்திடவேண்டும்
  • சனாதன சாரதியாய் நீ நல்வழி காட்டி நற்றுணையாக
  • வேண்டும்
  • சன்மார்க்கத்தில் சாந்தி நிலவி அன்பு மதம்
  • மொழியாலிணைந்திடல் வேண்டும்
  • உன் மார்க்கம் சத்திய கீதைப் பாதையில் சாத்வீகம் மலர்ந்திட
  • உன் சங்கல்பம் சாத்தியமாக வேண்டும்
  • ஸ்ரீ சத்ய சாயிநாத தெய்வமே, உனக்கு ஆத்மார்த்த,
  • ஆனந்த வந்தனம் சுவாமி சரணம் போற்றி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0