ஏல மாலையிட்டு
- ஏலவார் குழலி அம்மன் உனக்கு ஏலமாலையிட்டு
- ஏகமனதாய்த் தொழுதிட்டால் ஏகனனேகன்
- பாதியே பர்வத நாயகிப் பார்வதியே செங்கோட்டீசனின்
- சரிசமமே உமையாளே ஆபத்சகாயனி
- ஆத்மார்த்த நாயகியே ஆதியின் பாதியாய்
- பாகம்பிரியாளுனை ஆதி சக்தியாய்த்
- தொழவே ஸ்ரீ சிவசக்தி சாயிமா வாஞ்சையுடன்
- வந்தே வரமருள் வாயே
- குற்றாலீஸ்வரர் குழல்மொழிவாயம்மை இமயவான் புதல்வி
- பிரம்மராம்பிகைத் தாயே அமரபனீஸ்வரனுடை
- வேதநாயகித் தெய்வமே ஆயிரமாயிரம் பெயர்களில்
- உனையழைத்திட ஆனந்தம் பெருகிக்கண்ணில்
- நீர் வழிந்துள்ளம் கசியுமே
- அருளிடத்துணை வருவாயே, ஸ்ரீ சத்யசாயினிமா
– தமிழரசி பாலசுப்பிரமணியம்