விழாக்கோலம்

  • பொன்னார்மேனியனின் உருவிலோரங்கமே
  • பங்காரு எனப் பக்தனைப் பாந்தமுடனழைக்கும்
  • பர்த்திவாச சாயி குரு அபரஞ்சிப் பொன்னே!
  • குரு தெய்வமாய்க் குதூகலித்து வரும் தாயுமானவனே
  • கற்பகத் தருவாய் வரமே தருவாய்
  • சாயி அருளே அழகாய் அருள்வாய்
  • வற்றாத உன் கருணையையே புரிவாய்
  • இருளை நீக்கி நல்ஒளியை ஒளிரச் செய்வாய்
  • அரனேவுன் னன்பில் மிளிரச் செய்வாய்
  • இடைவிடா வுன்னன்பா லருளாம் தெய்வக் கடாட்சம் தருவாய்
  • கல்லால மரத்தடியில் சனாதன முனிவர்க் குபதேசம்
  • தபோவனத்திலுன் ஆத்மார்த்த பக்தருக்குச்
  • சனாதன சாரதியாய் அருளுரை உபதேசம்
  • வியாழக்கிழமையில் வியாழ பகவானே குருதெய்வமே வருக
  • அருள் தருக வுன் பதமலரடி தொழவே
  • வியாபகமாய்ஞாபகமாய் வீதி யெங்கும் விழாக்கோலம்
  • புனிதத் தீர்த்தங்களிலெல்லாம் துலா ஸ்நானம்
  • முக்கனிகளாலும் துலாபாரம், விழாக்கோலம்
  • திவ்யதேசங்களிலெல்லாம் தீப அலங்காரம்
  • மலர்ச்சோலைகளில் மலர்பறித்துச் சூடியே
  • மாலைகள் அலங்காரம்
  • ஷோடச உபச்சாரங்களுடன் பலவித அபிஷேகங்கள்
  • சுவாமியே நீயிருக்குமிடமெலாம் பிரசாந்தி பர்த்தியே
  • பர்த்தியே பாரினில்
  • பிரவாகமாய் உன் கருணை அன்பு அருள்
  • தர வரவேண்டும் போற்றியே.
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0