சிங்காரவேலன்

  • சிக்கல் சிங்காரவேலனுக்கும் சீலம் தரும் சீர்மிகுகந்தனுக்கும்
  • வரும் சிக்கல் நீக்கி சுபிட்சம் தரு சந்தன முருகனுக்கும்
  • வாழ்வியலில் நலமளிக்கும் மால்மருகன்
  • குமரனுக்கும் வேள்விசெய்து
  • வெற்றிமாலை சூடிப் பணியலாம்
  • செந்தூரின் நாயகனாம் குமர கோட்ட வேந்தனுமாம்
  • அலங்காரத் தங்கரதத்தில் அழகுடனே பவனியுமாம்
  • சிருங்காரச் சாமரமாம் ஆன்மீகச் சாளரமாம்
  • சனாதன சாரதியாம் சத்யசாயி முருகனுமாம்
  • சர்வ தேவதா சங்கமுமாம்
  • சுவாமிமலை முருகனாம் எந்தை தந்தை முந்தையாம்
  • விந்தைகள் புரியும் சாயி வியாப கனாம
  • முத்தைத்தரு பத்தித்திரு மகனுக்கு அலங்காரப் பந்தல்களாம்
  • பரிவாரங்களாம், திருவாவினன்குடித் திருமகனுக்கு
  • தினம் தினம் திருவிழாவாம்
  • பழமுதிர்ச்சோலை முருகனுக்கு பலப்பல
  • விதவிதப் பழங்களால் அபிஷேகமாம் அபிஷேகம்
  • திருச்செந்தூர் முருகனுக்குத் தெருவெங்கும் ஊர்வலமாம்
  • பழனிமலை முருகனுக்குப் பால் காவடிப் பரவசமாம்
  • திருத்தணி முருகனுக்கு தினம்தினம் ஆராதனைகளாம்
  • திருப்பரங்குன்றத்தில் வள்ளிதெய்வயானையுடன்,
  • பூச்சொரிந்து தேர்தனிலே ஊர்வல பவனியாம்
  • விஸ்வரூப தரிசனமாம் பிரசாந்தி சுப்பிரமணியசுவாமியுமாம்
  • ஸ்ரீ சத்தியசாயி முருகனுனக்குச் சுபமான மங்களமாம்
  • மங்களம் மங்களம் ஸ்ரீ சத்யசாயி முருகனே
  • உனக்கு ஜெயமங்களம்

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0