பிரசாந்தம்
- இரும்பான இதயத்தையும் ஈர்த்துவிடும் காந்தம்
- இளகாத மனந்தனையு மினிமையாக்கும் சாந்தம்
- இயல்பான மனிதம் தந்து நற்பவி செய்யும் பாந்தம்
- இனியவை மட்டுமீந்தினிதாய்த்தான் வாழவைக்கும்
- பிரகாந்தம், பிரசாந்தம்
- இந்திய மண்ணிலே சனாதன சாரதியாயவதரித்து
- வந்த தெய்வத்திரு அவதாரம்
- பாரதத்திற்குப் பன்னாட்டுப் பக்தர்களைப் பக்திபூர்வ ஜென்ம
- வாசனையாய் வரவழைத்தும் வணங்கச் செய்தும்
- பயணங்கள் பல செய்தும் பக்தி
- கீதைப்பாதை யமைத்திட்ட திவ்யவேத
- தெய்வத்தின் தெய்வம் சாயி
- சர்வ பரப்பிரம்ம ஸ்வரூபம், சர்வாந்தர்யாமி
- ஸ்ரீ சத்திய சாயி எனும் சாயி ராம நாமம் நாதம் கீதம் பாதம்
- பிரசாந்தியின் திவ்யப் புனிதப் பிரசாதம், மோட்சப் பிரதாதம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்