பிரசாந்தம்

  • இரும்பான இதயத்தையும் ஈர்த்துவிடும் காந்தம்
  • இளகாத மனந்தனையு மினிமையாக்கும் சாந்தம்
  • இயல்பான மனிதம் தந்து நற்பவி செய்யும் பாந்தம்
  • இனியவை மட்டுமீந்தினிதாய்த்தான் வாழவைக்கும்
  • பிரகாந்தம், பிரசாந்தம்
  • இந்திய மண்ணிலே சனாதன சாரதியாயவதரித்து
  • வந்த தெய்வத்திரு அவதாரம்
  • பாரதத்திற்குப் பன்னாட்டுப் பக்தர்களைப் பக்திபூர்வ ஜென்ம
  • வாசனையாய் வரவழைத்தும் வணங்கச் செய்தும்
  • பயணங்கள் பல செய்தும் பக்தி
  • கீதைப்பாதை யமைத்திட்ட திவ்யவேத
  • தெய்வத்தின் தெய்வம் சாயி
  • சர்வ பரப்பிரம்ம ஸ்வரூபம், சர்வாந்தர்யாமி
  • ஸ்ரீ சத்திய சாயி எனும் சாயி ராம நாமம் நாதம் கீதம் பாதம்
  • பிரசாந்தியின் திவ்யப் புனிதப் பிரசாதம், மோட்சப் பிரதாதம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0