விழாக்கோலம்
- பொன்னார்மேனியனின் உருவிலோரங்கமே
- பங்காரு எனப் பக்தனைப் பாந்தமுடனழைக்கும்
- பர்த்திவாச சாயி குரு அபரஞ்சிப் பொன்னே!
- குரு தெய்வமாய்க் குதூகலித்து வரும் தாயுமானவனே
- கற்பகத் தருவாய் வரமே தருவாய்
- சாயி அருளே அழகாய் அருள்வாய்
- வற்றாத உன் கருணையையே புரிவாய்
- இருளை நீக்கி நல்ஒளியை ஒளிரச் செய்வாய்
- அரனேவுன் னன்பில் மிளிரச் செய்வாய்
- இடைவிடா வுன்னன்பா லருளாம் தெய்வக் கடாட்சம் தருவாய்
- கல்லால மரத்தடியில் சனாதன முனிவர்க் குபதேசம்
- தபோவனத்திலுன் ஆத்மார்த்த பக்தருக்குச்
- சனாதன சாரதியாய் அருளுரை உபதேசம்
- வியாழக்கிழமையில் வியாழ பகவானே குருதெய்வமே வருக
- அருள் தருக வுன் பதமலரடி தொழவே
- வியாபகமாய்ஞாபகமாய் வீதி யெங்கும் விழாக்கோலம்
- புனிதத் தீர்த்தங்களிலெல்லாம் துலா ஸ்நானம்
- முக்கனிகளாலும் துலாபாரம், விழாக்கோலம்
- திவ்யதேசங்களிலெல்லாம் தீப அலங்காரம்
- மலர்ச்சோலைகளில் மலர்பறித்துச் சூடியே
- மாலைகள் அலங்காரம்
- ஷோடச உபச்சாரங்களுடன் பலவித அபிஷேகங்கள்
- சுவாமியே நீயிருக்குமிடமெலாம் பிரசாந்தி பர்த்தியே
- பர்த்தியே பாரினில்
- பிரவாகமாய் உன் கருணை அன்பு அருள்
- தர வரவேண்டும் போற்றியே.