தேடினும் கிட்டாத

  • ஸ்ரீராமா ஸ்ரீ ஜெய ராமா ஸ்ரீ சத்திய சாயி ராமா
  • அயோத்தியும் சரயூவும்போல் உன் அன்பும் கருணையும்
  • பர்த்தியும் சித்ராவதியும்போல் உன் கனிவும்
  • தனித்தனிக் கல்வி மொழியும்
  • சிவதனுசுவும் கோதண்டமும்போல்
  • உன் தெய்வீகமும் தெய்வாம்சமும்
  • குகனோடு ஐவரானோம் என்பதுபோல் சத்ய
  • தர்ம சாந்தி பிரேமை அஹிம்சைகளை
  • ஐந்து அறவழித் தூண்களாக்கினாய்
  • மானிட அவதாரத்தில் வாழ்ந்து காட்டி மகிமைகள் செய்தாய்
  • தேடினும் கிட்டாத தெய்வமாய்
  • வந்து வாழ்வில் வளங்களையும் தந்தாயுன்
  • அருளே உந்தன் அன்புரையாய்த் திகழும் சுவாமி
  • பொருள் உந்தன் பொருளுரையாய் விளங்கும் சுவாமி
  • மருள் நீக்கியே மனதை மலரச்செய்தாய் சுவாமி
  • இருள் போக்கி இன்பமதைத் தந்திட்டாய் சுவாமி
  • ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் பார்த்ததில்லை சுவாமி
  • உன்னைப் பற்றும் அபிஷேகம் உன்னால்தானே
  • தானே பார்த்துவிட்டோம் சுவாமி (குல் வந்த் அரங்கில்)
  • உனைப்போற்றித் துதிக்கும் அத்தனையும் அத்தியாயம்தான்
  • அற்புத அதிசயங்களே சுவாமி
  • ஸ்ரீ சத்யசாயி பரப்பிரும்மம் சர்வ அவதாரத்துடன்
  • சங்கமித்துப் பிறவிப்பயனெய்திட வைத்திட்டாய் சுவாமி
  • ஸ்ரீ சத்திய சாயி ராமா சரணம் சரணம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0