அன்பு மதம்

 • குருவாய்த் தெய்வமாய்க் கிருபை செய்கிறாய்
 • தெய்வத்துவம் நிறைந்தே கருணைபுரிகிறாய்
 • மாதா பிதா வாயனைத் துயிர்களுக்கும் அருள் தருகிறாய்
 • அண்ட சராசரங்களில் ஏகமாய் வியாபித்திருக்கிறாய்
 • அதிசய அற்புத லீலா வினோதங்கள் நடத்தி வருகிறாய்
 • தெய்வாம்சம் உந்தன் தெய்வத்வம் என
 • உணர வைத்து விட்டாய்
 • உன் அன்பு மதம் மொழி இனத்திலே
 • பன்மதப் பக்தர்களைப் பண்படுத்தினாய்
 • பர்த்தியின் அவதாரமாய் இறங்கி, இரங்கி, வந்தே
 • இன்னுயிர்க்கு இனிமையே செய்வித்தாய்
 • மனம், மெய், மொழிகளால் உன்னைத் துதித்தவர்க்குச்
 • சத்தியமான சாத்தியம் ஆகினாய்
 • தெய்வச் சகாவாய்ச் சகாயம் செய்கிறாய்
 • மும்மலங்கள் நீக்கி முக்திபெற அருள்கிறாய்
 • முதலும் முடிவுமான முக்கண்ணனாய்த் தெரிகிறாய்
 • முன்னுரை முடிவுரையாய் முகுந்தனாயருள்கிறாய்
 • பன்மதப் பக்தருக்கும் அவரவர் தெய்வமாய்க்
 • காட்சி தந்து அதிசயம் செய்கிறாய்
 • ஸ்ரீ சத்திய சாயி நாத குரு தெய்வமே
 • உனக்கு ஆனந்த வந்தனம் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0